1-3-22/14.50pm
புதுடில்லி : அமெரிக்காவின் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சி.இ ஓ வான சத்யா நாதெள்ளா அவரது மகன் இன்று காலமானார். அவருக்கு வயது 26. மரணமடைந்த தகவலை நாதெள்ளா தனது மெயில் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

சத்யா நாதெள்ளா மற்றும் அனு தம்பதியினரின் மகன் ஜைன் நாதெள்ளா. இவருக்கு பிறக்கும்போதே பெருமூளைவாத குறைபாடு இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2017 அக்டோபரில் சத்யா நாதெள்ளா தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் ” அன்று இரவு கருத்தரித்து 36ஆவது வாரத்தில் வயிற்றில் குழந்தை அசைவின்றி இருப்பதை எனது மனைவி அனு உணர்ந்தார்.
நாங்கள் பெல்லூவில் உள்ள மருத்துவமனைக்கு சென்றோம். அன்று நாங்கள் தவித்ததை இன்னும் ஞாபகத்தில் வைத்திருக்கிறேன். அவசர சிகிச்சைப்பிரிவில் மருத்துவர்கள் கூட பதட்டமாக இருந்தனர். அறுவைசிகிச்சை ஏற்பாடு நடைபெற்றது. 1996 ஆகஸ்ட் 13 அன்று இரவு 11.29 க்கு ஜைன் பிறந்தான். அவன் பிறக்கும்போது மூன்று பவுண்டுகள் இருந்தான்.

அப்போதுதான் கவனித்தோம். அவன் அழவே இல்லை. அதன்பிறகு சிகிச்சைக்கு சியாட்டில் குழந்தைகள்நல மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றோம். அனு தீவிர சிகிச்சைப்பிரிவிலேயே இருந்தார். நான் அடுத்த நாள் தான் ஜைனை பார்க்க சென்றேன். அடுத்து வரப்போகும் நாட்கள் கடினமாக இருக்கப்போகிறது என எனக்கு தெரியாது. கருப்பையில் ஏற்பட்ட மூச்சுத்திணறலால் பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தான்.
அவனுக்கு சக்கரநாற்காலி தேவைப்படும் என்பதை நாங்கள் உணர்ந்துகொண்டோம். இதன் பின் எங்கள் வாழ்வே மாறிப்போனது.” என குறிப்பிட்டிருந்தார். பல இந்திய அரசியல்தலைவர்கள் நாதெள்ளாவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
….உங்கள் பீமா
