22-3-22/13.05pm
உத்தரகாண்ட் : பதினோரு நாள் காத்திருப்புக்கு பிறகு இரண்டாவதுமுறையாகவும் புஷ்கர் சிங் தாமி நீடிப்பார் என கடந்த வெள்ளிக்கிழமை பிஜேபி தலைமை அறிவித்தது.
உத்தரகாண்ட் முதல்வராக தாமி நாளை பதவியேற்க உள்ளார். புஷ்கர் போட்டியிட்ட காதிமா தொகுதியில் தோல்வியடைந்ததால் மீண்டும் முதல்வர் ஆவாரா என சந்தேகம் எழுந்தது. அதையடுத்து நேற்று ஒருமனதாக சட்டமன்ற கட்சியின் தலைவராக புஷ்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அந்த கூட்டத்தில் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது,
தேர்தலுக்கு முன்னர் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். சட்டவிதிகளை உருவாக்க மூத்த குடிமக்கள் மற்றும் அறிவுஜீவிகள் கொண்ட குழு அமைக்கப்படும் என கூறியுள்ளபடி விரைவில் குழு அமைக்கப்படும். மேலும் யூனிபார்ம் சிவில் கோட் அமுல்படுத்தப்படும்.

பிரதமர் மீது நம்பிக்கை வைத்து பாஜகவுக்கு வெற்றியை பெற்றுத்தந்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கட்சி தலைவர் ஆகியோருக்கு எனது நன்றிகள். ஒரு சிப்பாயின் மகனான என்மீது நம்பிக்கை வைத்ததற்கும் நன்றியை கூறிக்கொள்கிறேன்.
மக்களுக்கு வெளிப்படையான ஆட்சியை வழங்குவோம். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். பிரதமர் உத்தரகாண்டுக்கான தொலைநோக்கு பார்வையை வழங்கியுள்ளார். மேலும் இந்த தசாப்தம் மாநிலத்துக்கு சொந்தமானது(இருமுறை ஆட்சியமைத்ததை குறிப்பிட்டார்) உத்திரகாண்டை முன்னனிமாநிலமாக மாற்றிக்காட்டுவோம்” என தெரிவித்தார்.
…..உங்கள் பீமா