Saturday, July 13, 2024
Home > செய்திகள் > தினமலர் நிருபர் மீது கொலைவெறி தாக்குதல்..! திமுகவினர் வெறிச்செயல்..?

தினமலர் நிருபர் மீது கொலைவெறி தாக்குதல்..! திமுகவினர் வெறிச்செயல்..?

5-1-22/10.00am

சென்னை : செய்தி சேகரிக்க சென்ற தினமலர் நிருபர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது திமுகவினர் கடும் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அச்சிறுபாக்கம் அருகே உள்ள முருங்கை கிராம ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மீன் பண்ணை அமைக்க குட்டை அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இந்த திட்டத்தில் நூறுநாள் வேலை வாய்ப்பு திட்டத்தை தவிர்த்து இயந்திரங்கள் மூலம் பணி நடைபெறுகிறது. இது திமுக ஊராட்சி தலைவரின் நேரடி மேற்பார்வையில் நடைபெற்று வருவதாக தெரிகிறது.

`

ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் நடைபெறும் பணியில் குளறுபடி இருப்பதாக தகவலறிந்த தினமலர் நிருபர் மோகன் அங்கு செய்தி சேகரிக்க சென்றார். அவரை மடக்கிய திமுக கும்பல் அவரை சராமாரியாக தாக்கியதாகவும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. திமுக எதிர்க்கட்சியாக இருந்தால் இந்நேரம் பத்திரிக்கை சுதந்திரம் கருத்துரிமை எழுத்துரிமை என பொங்கி போஸ்டர் ஒட்டியிருக்கும்.

```
```

இது தெரியாத மக்கள் அவர்களை ஆளும்கட்சியாக்கி திமுகவின் கைகளை கட்டிப்போட்டுவிட்டதாக நடுநிலையாளர்கள் விமர்சனம் செய்துவருகின்றனர். எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது பொங்கல் பரிசாக 5000 ரொக்கத்தொகை கொடுக்க கோரிக்கை எழுப்பிய திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஆனதும் ரொக்கத்தொகையை கண்ணில் காட்ட மறந்துவிட்டார். அவரின் நல்ல மனதை உணர்ந்து அவரை அடுத்த முறை எதிர்கட்சித்தலைவராக மக்கள் அமரவைக்க வேண்டும் என பிஜேபியினர் விமர்சனம் செய்துவருகின்றனர்.

….உங்கள் பீமா