19-1-22/12.51PM
மும்பை : நேற்று எதிர்ப்பாராவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் கடற்படை அதிகாரிகள் மூன்று பேர் வீரமரணமடைந்தனர். இதுகுறித்து கடற்படை அட்மிரல் தனது வருத்தங்களை தெரிவித்துள்ளார்.

இந்திய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல் ஐ.என்.எஸ். ரன்வீர் மும்பை கடற்படைத்தளத்திற்கு ஈஸ்டர்ன் நாவல் காமாண்டிலிருந்து சீக்கிரமே திரும்பி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராவிதமாக ஏற்பட்ட விபத்தில் மாஸ்டர் சீப் பெட்டி ஆபிசர் ( MCPO ) பர்ஸ்ட் க்ளாஸ் க்ரிஷன் குமார் MCPO செகண்ட் க்ளாஸ் சுரீந்தர் குமார் மற்றும் MCPO ஏ.கே.சிங் ஆகியோர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
மேலும் 11 மாலுமிகள் பலத்த காயமடைந்தனர். வீரர்களின் துரித செயல்பாட்டில் தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. காயமடைந்த வீரர்களை INS அஸ்வினி கடற்படை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். முக்கிய ஆவணங்கள் மற்றும் உதிரிபாகங்கள் சேதமடையாமல் பாதுகாக்கப்பட்டுவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனிடையே கடற்படை அட்மிரல் ஹரிகுமார் தனது ஆழ்ந்த வருத்தங்களை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு தெரிவித்துள்ளார்.
விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல 2013ல் ஐ.என்.எஸ்.சிந்துரக்ஸாக் போர்க்கப்பலில் நடந்த வெடிவிபத்தில் 18மாலுமிகள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சிலநாட்களாக நிகழும் ராணுவ வீரர்களின் மரணம் இந்திய மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
….உங்கள் பீமா