Friday, April 19, 2024
Home > செய்திகள் > தமிழ் சினிமாவை மிஞ்சிய பழிவாங்கல்..! மனைவியை வேட்டையாடியவனை வேட்டையாடிய கணவர்..!

தமிழ் சினிமாவை மிஞ்சிய பழிவாங்கல்..! மனைவியை வேட்டையாடியவனை வேட்டையாடிய கணவர்..!

19-1-22/14.05pm

மத்திய பிரதேசம் : மத்திய பிரதேசம் ரத்தலம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவியை கடந்த வருடம் ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. அதற்கு பதிலடியாக ஒருவரை வெடிகுண்டுவைத்து பாதிக்கப்பட்டவரின் கணவர் பழிதீர்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரத்தலம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் வயது 32. இவரது மனைவியை கடந்த வருடம் அதே கிராமத்தைச் சேர்ந்த தபாங் பன்வர்லால் படிதார், லால்சிங் கதிஜா மற்றும் தினேஷ் ஆகியோர் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்தனர். போலீசில் புகார் அளித்தால் கொன்றுவிடுவோம் எனவும் மிரட்டியிருக்கிறார்கள். இதனால் மனமுடைந்த தம்பதிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் பொதுவெளியில் சந்தோசமாக நடமாடிவருவதி கண்ட சுரேஷ் கோபத்தின் உச்சிக்கே சென்றுள்ளார். சட்டப்படி தண்டனை வாங்கி கொடுக்க முடியாது என கருதிய சுரேஷ் பழிதீர்க்கும் படலத்தை ஆரம்பித்தார். ரத்தலம் பகுதியில் டெட்டனேட்டர்கள் மற்றும் ஜெலட்டின் குச்சிகள் அதிகம் கிடைக்கும். விவசாய நிலங்களில் ஆழ்துளை கிணறு தோண்டவும் மீன்பிடிக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

`

சிம்லாவாடா பகுதியை சேர்ந்த பத்ரி படிதாரிடம் ஜெலட்டின் குச்சிகளை வாங்கினார் சுரேஸ். முதலில் பன்வாரிலாலை பழி வாங்க எண்ணி அவரது பண்ணையில் மோட்டாரில் பொருத்தி வைத்தார். ஜெலட்டின் குச்சிகள் குறைவாக இருந்ததால் பன்வாரிலால் லேசான காயங்களுடன் தப்பினார். அதையடுத்து ஆறுமாதம் காத்திருந்த சுரேஷ் லால் சிங்கிற்கு குறிவைத்தார்.

இந்த முறை 14 ஜெலட்டின் குச்சிகளை லால் சிங்கின் மோட்டாரில் பதுக்கிவைத்தார். லால் அதுதெரியாமல் மோட்டார் ஸ்விட்சை ஆன் செய்யும்போது பலமாக வெடித்தது. அதனால் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். கடந்த 4ம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் கிராமமே பதட்டமானது. போலீசார் நடத்திய விசாரணையில் சுரேஷ் மீது சந்தேகம் எழுந்தது. அதையடுத்து சுரேஷ் தலைமறைவாக இன்று போலீசார் அவரை கைது செய்தனர்.

```
```

மேலும் வருக்கு ஜெலட்டின் குச்சிகளை சப்ளை செய்த ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கடந்த வாரம் இருவரை போலீசார் கைதுசெய்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் உயிருக்கு ஆபத்து வரும் என கருதி போலீசாரை தொடர்புகொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய பொதுமக்களில் சிலர்,

” இது போன்ற நடவடிக்கைகள் மட்டுமே குற்றச்செயலில் ஈடுபடுபவர்களுக்கு பயத்தை உண்டுபண்ணும். சுரேஷ் செய்தது சரியே” எனவும் சட்டத்தை கையிலெடுத்து பழிவாங்க நினைப்பது விரோதமான போக்கு என்றும் நீதிமன்றத்தை அணுகுவதே சரியான அணுகுமுறை என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

….உங்கள் பீமா