Saturday, July 27, 2024
Home > அரசியல் > முன்னாள் ராணுவ ஜெனரல் கொடுத்த ஷாக்..! குஷியான பிஜேபி..!

முன்னாள் ராணுவ ஜெனரல் கொடுத்த ஷாக்..! குஷியான பிஜேபி..!

19-1-22/12.00pm

சண்டிகர் : பிஜேபியிலிருந்து கடந்த ஆறு மாதங்களில் மூன்று டஜன் எம்பிக்கள் எம்.எல்.ஏக்கள் விலகிய நிலையில் பிஜேபியின் செல்வாக்கு குறைந்துவிட்டதாக செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் கருத்துக்கணிப்புகள் வேறு முடிவை கொடுத்திருந்தன.

இந்நிலையில் முன்னாள் ராணுவ ஜெனரல் ஜோஹிந்தர் ஜஸ்வந்த் சிங் நேற்று பாஜகவில் முறைப்படி தன்னை இணைத்துக்கொண்டார். இது பஞ்சாப் அரசியலில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சலப்பிரதேச ஆளுநராக இருந்த ஜேஜே சிங் 2018 வரை சிரோமணி அகாலிதளத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் ஜேஜே சிங் காங்கிரஸ் அல்லது ஆம் ஆத்மீயில் இணைவார் என கிசுகிசுக்கப்பட்ட நிலையில் பிஜேபி தேர்தல்குழு பொறுப்பாளரும் பஞ்சாப் மாநில பிஜேபி தலைவருமான அஸ்வினி சர்மா மற்றும் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் முன்னிலையில் பிஜேபியில் இணைந்து கொண்டார்.

`

ஜேஜே சிங் 2017 நடந்த சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதல்வர் அம்ரீந்த சிங்கிற்கு எதிராக பாட்டியாலா தொகுதியில் களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே முலாயம் சிங் யாதவ் இளைய மருமகளான அபர்ணா யாதவ் உத்திரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌர்யா மற்றும் பிஜேபி மாநில தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் முன்னிலையில் இன்று அதிகாரபூர்வமாக பிஜேபியில் இணைந்தார்.

```
```

அடுத்தடுத்த விக்கெட்டுகள் காலியான நிலையில் தேசப்பற்று மற்றும் இறை நம்பிக்கை கொண்ட பிரபலங்கள் பிஜேபியில் தொடர்ந்து இணைந்து வருவது பிஜேபிக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

…..உங்கள் பீமா