9-11-21/ 6.18 am
கோட்டா : ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா பகுதியில் இளம்பெண் ஒருவர் நான்கு நபர்களால் சராமாரியாக வெட்டப்பட்டார். அந்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி செய்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கட்டிலில் ஏறிய பின்பு ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக மக்கள் நல அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சியினர் தொடர் குற்றசாட்டை எழுப்பிவருகின்றனர்.
கடந்த இருபது நாளில் நாற்பதுக்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் முதல்வர் அசோக் கெலோட் வீட்டின் அருகிலேயே பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் சராமரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். மேலும் அதே தொகுதியில் தலித் பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டனர்.
காங்கிரஸ் தலைவர்கள் யாரும் இந்த அவலங்களை பற்றி வாய் திறப்பதில்லை என பிஜேபியினர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியை சேர்ந்தவர் நந்து பாய் என்பவர் மன்சூர் மற்றும் அவரது நண்பர்களால் கொடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
நந்து பாய் தனது அண்டை வீட்டுக்காரரான மன்சூர் என்பவருக்கு கடன் கொடுத்திருக்கிறார். தற்போது நந்து பாய்க்கு அவசர தேவை ஏற்பட்டதால் அதை திரும்ப கேட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த மன்சூர் மற்றும் அவரது கூட்டாளிகள் கத்தியால் அவரை பெண் என்றும் பாராமல் தாக்கினர். இதனால் படுகாயமடைந்த நந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார்.
இந்த சம்பவம் கோட்டா பகுதியில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
……உங்கள் பீமா