Friday, April 18, 2025
Home > செய்திகள் > பூஸ்டர் டோஸ் பூகம்பம்…! நெறிமுறைகளை மீறினாரா முதல்வர்…!

பூஸ்டர் டோஸ் பூகம்பம்…! நெறிமுறைகளை மீறினாரா முதல்வர்…!

12.1.22/15.30pm

சென்னை : முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் போடப்படும் என மத்திய பிஜேபி அரசு அறிவித்தது. மத்திய அரசின் பூஸ்டர் தடுப்பூசி திட்டத்தின் கீழ் முதல் ஆளாக முதல்வர் முக ஸ்டாலின் தடுப்பூசி செலுத்திக் கொண்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை இந்தியாவெங்கும் பெருகி வரும் வேளையில் புதிதாக ஒமிக்ரான் எனும் வைரசும் வேகமாக பரவி வருகிறது. இதை கவனத்தில் கொண்ட மத்திய அரசு முன்களப்பணியாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் பூஸ்டர் டோஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதை வழக்கம்போல ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டது.

இதனிடையே முதல்வர் முக ஸ்டாலின் சித்திரை மாதம் வரும் தமிழ்ப்புத்தாண்டிற்க்கு மறதியால் பொங்கல் அன்று தமிழ்ப்புத்தாண்டு என வாழ்த்து கூறியுள்ளார். இந்நிலையில் பூஸ்டர் டோஸ் இரண்டு தவணைகள் முடிந்து 279 நாட்கள் கழித்தே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை மறந்து விட்டார் முதல்வர் என அதிமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.

`

கடந்த ஏப்ரல் 22 அன்று இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட முதல்வர் 264ஆவது நாளிலேயே பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனது மறதியால் முதல்வர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார் என ஒரு தரப்பும் நெறிதுறைகளை மீறிவிட்டார் என இன்னொரு தரப்பும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

```
```
booster

தமிழக மக்களை நேரடியாக களத்தில் சென்று சந்தித்து கள ஆய்வு மேற்கொள்ளும் முதல்வர் ஒரு முன்களப்பணியாளரே. வயது மூப்பின் காரணமாக வந்த மறதியால் இந்த தவறு நிகழ்ந்திருக்கலாம் என திமுக தொண்டர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

……உங்கள் பீமா