27-11-21/8.28am
சென்னை : திமுக தலைமையிலான தமிழக அரசு மதமாற்றத்தை ஊக்குவிப்பதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது. முதல்வர் முக ஸ்டாலினின் அறிக்கை ஒன்று அதை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காண்பித்துள்ளது.
“கிருத்துவ மதத்திற்கு மாறிய பிறகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்க்கான இட ஒதுக்கீடு, ஊக்கத் தொகை போன்றவற்றைப் பெற முடியாது என்று தமிழக அரசுக்குத் தெரியாதா”
கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் திமுக நாங்கள் இந்து விரோத கட்சி இல்லை. எங்கள் மீது இந்துவிரோத கட்சி என்கிற பிம்பத்தை கட்டமைக்க பார்க்கிறார்கள் என மேடை தோறும் கூறி வந்தது. உதயநிதி ஸ்டாலினுக்கு வேல் எல்லாம் பரிசாக வழங்கப்பட்டு ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்பட்டது. முக ஸ்டாலின் ஒருபடி மேலே போய் ஸ்ரீரங்கம் கோவிலுக்கெல்லாம் சென்றார். ஆனால் விபூதியை தட்டிவிட்டார் என்பது வரலாறு.
இப்படி இந்துக்களின் கட்சி என காண்பித்துக் கொண்ட திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற உடன் முதல் வாரத்திலேயே நான்கு கோவில்களை தரைமட்டமாக்கியது. அடுத்தடுத்த மாதங்களில் நேற்று இடிக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் கோவில் உட்பட பதினாறு கோவில்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது என இந்து அமைப்புகள் விமர்சிக்கின்றன.
இந்நிலையில் மனிதவள மேலாண்மை அமைச்சர் வெளியிட்டுள்ள குறிப்பில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் கிறித்தவ மதம் மாறிய மாணவர்கள் முனைவர் பட்டப்படிப்பிற்கான கல்வி ஊக்கத்தொகையை அறிவித்துள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கல்வி ஊக்கத்தொகை தவறாமல் வழங்க இந்திய அரசியலமைப்பு சட்டம் எடுத்துரைக்கிறது.
ஆனால் மதம் மாறிய ஒருவருக்கு ஊக்கத்தொகை வழங்குவது அரசியல்சாசனத்திற்கு எதிரான ஒன்றாகும். திமுகவின் இந்த அறிவிப்பு ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களை மறைமுகமாக மதம் மாற்ற ஊக்குவிப்பதாக அமைந்துள்ளதாக பல்வேறு தரப்பிலிருந்து குற்றசாட்டு எழுந்துள்ளது.
மேலும் “கிருத்துவ மதத்திற்கு மாறிய பிறகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்க்கான இட ஒதுக்கீடு, ஊக்கத் தொகை போன்றவற்றைப் பெற முடியாது என்று தமிழக அரசுக்குத் தெரியாதா” என நெட்டிசன்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
…..உங்கள் பீமா