Friday, September 22, 2023
Home > செய்திகள் > ராணுவ ஒப்பீடு..! காங்கிரஸ் VS பிஜேபி..! புகைப்பட தொகுப்பு..!

ராணுவ ஒப்பீடு..! காங்கிரஸ் VS பிஜேபி..! புகைப்பட தொகுப்பு..!

14-12-21/19.24pm

இந்தியா : இந்திய ராணுவம் என்கிற ஒற்றை சொல்லில் சாதாரணமாக சொல்லிவிட்டு கடந்து செல்ல முடியாது. அவர்கள் எல்லையில் படும் பாடுகள் அவஸ்தைகள் குடும்ப உறுப்பினர்களை சொந்தங்களை விட்டு தூரமாய் நாட்டுக்காக நமக்காக இந்திய இராணுவம் செய்யும் தியாகங்களை நான்கு பத்திகளில் எழுதி அடைத்து விட முடியாது.

உதாரணத்திற்கு நீர்மூழ்கி கப்பலில் நாட்டைக்காக்க பயணிக்கும் வீரர்களின் நிலையை சொல்வதென்றால் நெஞ்சு விம்மும். ஆக்சிஜன் அளவு குறைவான கலன்களில் பயணிக்கும்போது மூச்சுவிடுவதை குறைத்துக் கொள்ளவேண்டும். ஒரு மனிதன் சராசரியாக ஒருநாளைக்கு 22000 முறை தோராயமாக மூச்சை இழுத்து விடுவார் என்றால் நீர்மூழ்கி கப்பலில் பயணிக்கும் நமது எல்லை தெய்வங்கள் மிக குறைவாக சுவாசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் நமது பாதுகாப்பிற்காக.

`

அதற்க்கென தனி மூச்சுப்பயிற்சி மற்றும் யோகா ஆகியவை வீரர்களுக்கு கற்று தரப்படுகிறது.

அதுவே ஹிமாலயன் மலையில் பாதுகாப்பிற்கு நிற்கும் வீரர்கள் பாடு அந்தோ பரிதாபம். மைனஸ் நாலு டிகிரி குளிரில் மூச்சுவிட சிரமப்பட்டுக்கொண்டு நுரையீரல் பாதிப்பு அபாயம் இருந்தாலும் நாட்டை பாதுகாக்க தங்கள் உயிரை தியாகம் செய்து நம்மை காக்கும் எல்லை தெய்வங்கள் அவர்கள் என சொன்னால் அது மிகையாகாது.

இந்திய ராணுவத்திற்கு ஒதுக்கப்படும் நிதியானது கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மிக சொற்பமாகவே இருந்து வந்துள்ளது. 2014 மத்தியில் மோடி தலைமையிலான அரசு ஆட்சி அமைத்த பின்னரே ராணுவத்திற்கு ஒதுக்கப்படும் நிதி 24.7% அதிகரிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் வீரர்கள் வகுத்திருந்த ஏகே 47 ரக துப்பாக்கிகள் குறைந்த தூரமே இலக்கை குறிவைத்து வீழ்த்தக் கூடியது.

ஆனால் தற்போது அனைத்து நவீன ரக துப்பாக்களிலும் தொலைநோக்கு கருவி பொருத்தப்பட்டுள்ளது. வீரர்கள் அணியும் பாதுகாப்பு கவசத்தில் நவீனங்கள் புகுத்தப்பட்டு பாதுகாப்புத்தன்மை அதிகரிக்கப்பட்டுள்ளது, மேலும் 9எம்எம் ரக ரவைகளை தங்கவல்ல தலைக்கவசங்கள் இந்தியாவிலேயே அதுவும் தமிழ்நாட்டில் உலகத்தரத்தில் தயாரிக்கப்பட்டு ராணுவத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

…..உங்கள் பீமா