21-1-22/11.55am
டெல்லி : இந்துக்களின் புனித தெய்வமாக வணங்கப்படும் பசுக்கள் சட்டத்திற்கு புறம்பாக கடத்தப்படுவதும் கொலைசெய்யப்படுவதும் உத்திரபிரதேசம் அஸ்ஸாம் மற்றும் குஜராத் மாநிலங்களில் தடைசெய்யப்பட்டிருக்கிறது.


இந்நிலையில் அதிரடியாக மத்திய உள்துறை அமைச்சாகம் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. யூனியன் பிரதேசங்களான டாமன் டையூ தாதர் நகர் பகுதிகளில் பசுக்களை கடத்துவது குற்றச்செயல் என வரையறுக்கப்பட்டிருக்கிறது. மேலும் பசுவதை க்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பத்தாண்டு கடுங்காவல்தண்டனை அல்லது ஆயுள்தண்டனை ஐந்து லட்சம் வரை அபராதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் பசு கன்று காளை எருது உள்ளிட்ட விலங்குகள் இறைச்சிக்காக பயன்படுத்தப்படுவதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பு நோக்கங்களுக்காக கொண்டு செல்வதற்கு கட்டாய அனுமதி வாங்கவேண்டும். தவறும் பட்சத்தில் அது பசுவதை சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய ஒன்றாகும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
…..உங்கள் பீமா