ஒசூர்: ஒசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சின்னார் எனும் பகுதியில் அமைந்துள்ளது ஆம்பூர் ஸ்டார் பிரியாணி உணவகம். இங்கு புழு பிரியாணி பரிமாறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த அசைவ உணவகம் 1890ல் ஆரம்பிக்கப்பட்டது என எப்போதும் வாசகம் காணப்படும். ஆனால் கடந்த சில வருடங்களாக அதன் கிளை உணவகங்களில் நாய் பூனை போன்ற பிராணிகளை பிரியாணியில் கலப்பதாக அதிர்ச்சி செய்திகள் வெளிவந்துள்ளன. சமீபத்தில் வேலூர் அருகே இந்த உணவகத்தில் பிரியாணி சாப்பிட்டு இறந்தது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் அந்த உணவாக உரிமையாளர் அபராத தொகையை மட்டும் கட்டி வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படி அடுக்கடுக்கான புகார்கள் இந்த உணவகங்கள் மீது கூறப்பட்டாலும் இங்கு சென்று பிரியாணி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை மட்டும் குறையவில்லை. இந்நிலையில் நேற்று காவேரிப்பட்டிணத்தை அடுத்த சப்பாணிபட்டி பகுதியை சேர்ந்த நண்பர்களான மூர்த்தி, அருண், ராமச்சந்திரன், அருள் ஆகிய 5 பேர் அந்த உணவகத்தில் 4 சிக்கன் பிரியாணியை ஆர்டர் செய்துள்ளனர். சிக்கன் பிரியாணி வந்ததும் அதில் பெரிய அளவிலான புழு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் நிர்வாகத்திடம் முறையிட்டனர்.
இதை கண்டுகொள்ளாத நிர்வாகம் அலட்சியமாக கத்தரிக்காயிலிருந்து புழு வந்திருக்கலாம் என கூறியுள்ளனர். கோபமடைந்த வாடிக்கையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது பெங்களூருவில் உள்ள மேலாளருக்கு ஹோட்டல் ஊழியர்கள் போன் செய்துள்ளனர். அதில் பேசிய மேலாளர் பிரியாணியில் புழு இருந்ததெல்லாம் ஒரு புகாரா சாப்பிட்டு விட்டு செல்லுங்கள் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த வாடிக்கையாளர்கள் “பிரபலமான ஹோட்டல் என்பதால் பலரும் நம்பி சாப்பிடக் கூடிய இந்த ஹோட்டலில் இதுப்போன்ற சம்பவங்களின் போது கூட திருத்திக் கொள்ள முயற்சிக்காமல் அலட்சியம் காட்டும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.
…..உங்கள் பீமா