Friday, September 22, 2023
Home > அரசியல் > போதும்டா சாமி ரீல் அந்துருச்சு..! உத்தரகாண்ட் உதார்..! வச்சு செஞ்ச நெட்டிசன்கள்..!

போதும்டா சாமி ரீல் அந்துருச்சு..! உத்தரகாண்ட் உதார்..! வச்சு செஞ்ச நெட்டிசன்கள்..!

14-12-21/18.30pm

உத்திரகாண்ட் : அரசியல்வாதிகள் சொன்ன வார்த்தையை மாற்றிப்பேசுவார்கள் என ஒரு கருத்து மக்களிடம் நிலவிவருவது உண்டு. அந்த மரபை உடைத்தவர் ஆம் ஆத்மீ கட்சி நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால். ஆம். என்றுமே அவர் சொன்ன வார்த்தையை மாற்றிப்பேசுவதில்லை.

டெல்லி தேர்தலுக்கு அதாவது அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சிக்கு வருமுன்னர் பேசிய வார்த்தைகளை இன்றுவரை ஒவ்வொரு மாநிலங்களிலும் தொடர்ந்து பேசி வருகிறார். கடந்த தேர்தலுக்கு முன்னர் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை என கூறினார். ஆனால் அது நடந்த பாடில்லை. இதே பல்லவியை கோவா உத்திரகாண்ட் பிஹார் பஞ்சாப் என அனைத்து மாநிலங்களிலும் படித்துவிடுகிறார்.

அதோடு நில்லாமல் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மாதாமாதம் தவறாமல் 1000 ரூபாய் வழங்கப்படும். இலவச மின்சாரம் மற்றும் நான்கு மாவட்டங்கள் சேர்த்து அல்லது மாநிலம் முழுவதும் 500 முதல் 1000 பள்ளி கல்லூரிகள் இலவசமாக பயில கட்டித்தரப்படும் என இவை போன்ற வசனங்களை தவறாமல் அனைத்து மாநில கூட்டத்திலும் பேசிவிடுவார்.அதில் சிறப்பாக ஒரு கூடுதல் வார்த்தையை சேர்த்து இன்று உத்திரகாண்டில் பேசியிருக்கிறார்.

`

” நான் அரசியல் தலைவரில்லை. எனக்கு அரசியல் தெரியாது. எனக்கு செயல்கள் தான் தெரியும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு 1000 ரூபாய் மானியம் வழங்கப்படும். இலவச மின்சாரம் வழங்கப்படும்” என கூறியுள்ளார். ஆனால் டெல்லியில் அவர் கொடுத்த வாக்குறுதியின் நிலைமை என்ன என்று சற்றே பார்க்கலாம்.

வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை என கூறியவர் கடந்த 7 வருடங்களில் 440 பேருக்கு வேலை வாய்ப்பை அளித்துள்ளார். அதிலும் அவர் சார்ந்த கட்சியின் தலைவர்களின் சிபாரிசுகளுக்கு. இந்த உண்மை RTI மூலம் வெளிப்பட்டுள்ளது. இலவச அதிநவீன மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் கட்டித்தரப்படும் என கூறினார். ஆனால் கடந்த ஏழு வருடங்களில் அவர் வாக்குறுதி அளித்ததைப்போல 500 கட்டித்தரவில்லை. வெறும் ஒன்றே ஒன்று என நெட்டிசன்கள் பொங்கல் வைக்கின்றனர்.

அதே போல வேலையில்லா திண்டாட்டம் கடந்த வருடம் அதாவது 2020ல் 44.9% அதிகரித்திருப்பதாக CMIE அறிக்கை வெளியிட்டுள்ளது. இப்படி வாக்குறுதி கொடுத்து ஏமாற்றுவதில் திமுகவை பின்தொடர்ந்து செயல்படுகிறார் அரவிந்த் கெஜ்ரிவால் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

….உங்கள் பீமா