19-12-21/12.10PM
கேரளா : தொடர்ந்து பத்து மணிநேரத்தில் இரண்டு பெரும்புள்ளிகள் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பது கேரளாவில் அதிர்ச்சியை உண்டுபண்ணியுள்ளது. கடவுளின் பூமி என அழைக்கப்படும் கேரளா தற்போது கொலைகளின் தலைநகரமாக மாறிவருகிறது.
பெரும்பாலும் நடக்கும் கொலைகள் அரசியல் பின்னணியை சார்ந்தே இருக்கிறது. கேரள முதலமைச்சரே ஒரு கொலைக்குற்றவாளி என தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆர்.எஸ்.எஸ் தொண்டர் சஞ்சய் கொல்லப்பட்ட ரத்தத்தின் ஈரம் காய்வதற்குள் பிஜேபி தலைவரான ரஞ்ஜீத் கொல்லப்பட்டது பிஜேபியினரிடையே அதிர்ச்சியை உண்டுபண்ணியுள்ளது.

2016 ஆலப்புழா சட்டமன்ற தொகுதி பிஜேபி வேட்பாளரான ரஞ்ஜீத் ஸ்ரீனிவாஸ் வயது 40. இன்று காலை தனது வீட்டிலிருந்த போது அவரை ஒரு மர்மக்கும்பல் கடத்திகொண்டுபோனது. பின்னர் அவரை கொடூரமாக கொன்று சடலத்தை ரோட்டோரமாக வீசிச்சென்றதாக கூறப்படுகிறது. கொடூரமாக கொல்லப்பட்ட ஸ்ரீனிவாஸ் ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து மத்திய அமைச்சர் முரளிதரன் கூறுகையில் ” இது இஸ்லாமிய தீவிரவாதிகளின் கைவண்ணம். அந்த கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். இன்று காலையில் பிஜேபி ஓபிசி அணி மாநில செயலாளர் சீனிவாஸ் கொடூரமாக குத்தி கொல்லப்பட்டார் என்ற செய்தி வந்ததும் திகைத்துப் போனேன். உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியுள்ளேன்” என கூறினார்.
இந்த சம்பவம் நடைபெற்ற சில மணிநேரம் முன்பு நேற்று இரவு 7.30 அளவில் SDPI மாநில செயலாளரான கே.எஸ்.ஷான் ஆலப்புழா மன்னஞ்சேரி பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அவரைப்பின்தொடர்ந்த மர்ம கார் ஒன்று அவரை மோதியது. அதில் நிலைகுலைந்த ஷான் கீழே விழுந்த போது காரில் இருந்து இறங்கிய கும்பல் அவரை சரமாரியாக வெட்டி வீசியது. அதன்பின்னர் அந்த மர்ம கும்பல் தப்பித்து சென்றது.
படுகாயமுற்ற ஷானை மீட்டு எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் ஆலப்புழா பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது வந்த தகவலின் படி ஷான் மரணமடைந்துவிட்டதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
…..உங்கள் பீமா