21-2-22/14.10pm
ஆந்திரா : தொழிற்துறை அமைச்சரின் திடீர் மரணம் ஆந்திர மாநிலத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று காலை நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார்.
ஆந்திரப்பிரதேச தொழிற்துறை அமைச்சராக இருப்பவர் மேகபதி கெளதம் ரெட்டி. இவர் துபாயில் உள்ள தொழில் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு நேற்று ஹைதராபாத் திரும்பினார். இன்று அதிகாலையில் அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. அதையடுத்து அவரது இல்லத்திலிருந்து அப்போல்லோ மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.
இன்று காலை 9.16 அளவில் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தற்போது அதிகாரபூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது. அவருக்கு வயது 49. மருத்துவமனை செய்திக்குறிப்பில் ” திரு.கெளதம் ரெட்டி ஜூபிலி ஹில்ஸ் பகுதியிலுள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அவசரமான நிலமையில் காலை 7.45க்கு கொண்டுவரப்பட்டார்.
சிகிச்சை அளிக்கமுடியாத நிலையில் மூச்சுத்திணறலுடன் கொண்டுவரப்பட்டார். அவருக்கு தேவையான அவசர சிகிச்சைகள் கொடுக்கப்பட்டது. 90 நிமிடங்களுக்கு மேலாக சிபிஆர் வழங்கப்பட்டது. இருப்பினும் மாரடைப்பு ஏற்பட்டு 9.26 அளவில் உயிர்பிரிந்தது” என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர அரசு அமைச்சருக்கு இரண்டு நாள் மௌன அஞ்சலி செலுத்த உள்ளது. முதலமைச்சர் ஒய்.எஸ்.ஆர் ஜெகன் மற்றும் பல தலைவர்கள் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
…..உங்கள் பீமா