Friday, June 9, 2023
Home > செய்திகள் > ராணுவ வாகனங்கள் தீ வைத்து எரிப்பு..! பதிலடியில் பலியான 13 உயிர்கள்..! வருத்தம் தெரிவித்த ராணுவம்..!

ராணுவ வாகனங்கள் தீ வைத்து எரிப்பு..! பதிலடியில் பலியான 13 உயிர்கள்..! வருத்தம் தெரிவித்த ராணுவம்..!

5-12-21/15.53pm

நாகலாந்து : நாகலாந்து மாநிலம் மோன் மாவட்டத்திலுள்ள ஓட்டிங் கிராமத்தில் நடைபெற்ற ராணுவ துப்பாக்கி சூட்டில் ராணுவ வீரர் உட்பட 13 பேர் பலியானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நாகலாந்தில் ஊடுருவல்காரர்களால் அடிக்கடி அசம்பாவிதங்கள் நிகழ்ந்து வருகின்றன. மேலும் மியான்மர் இருந்து இந்திய அத்துமீறி ஊடுருவும் இவர்கள் குண்டுவெடிப்பு கடத்தல் போன்ற சமூக விரோத ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஊடுருவலை தடுக்கும் பொருட்டு ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மியான்மர் எல்லையை ஒட்டிய நாகலாந்து வடகிழக்குப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும் அவர்கள் ஒரு வாகனத்தில் வரப்போவதாகவும் ரகசிய தகவல் ராணுவத்திற்கு கிடைத்தது. அதையடுத்து தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்ட ராணுவத்தினர் அந்த வழியே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வேகமாக வந்த வாகனத்தை சுட்டு வீழ்த்தினர்.

`

ஆனால் அந்த வாகனத்தில் வந்தது நிலக்கரிசுரங்கத்தில் பணியை முடித்துவிட்டு திரும்பிய பொதுமக்கள் என அதன்பிறகே தெரியவந்திருக்கிறது. ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சாதாரண பொதுமக்கள் கொல்லப்பட்டனர் எனில் இந்த துப்பாக்கி சூட்டில் ராணுவ வீரர் இறந்தது எப்படி. அப்பொழுது வந்தவர்கள் யார். ஏன் ராணுவ வீரர் இறந்தார் என பல கேள்விகளுக்கு விடை மர்மமாகவே உள்ளது.

மேலும் நடந்த சம்பவத்திற்கு ராணுவம் வருத்தம் தெரிவித்துள்ளது. இதனிடையே நாகலாந்து மாநிலத்தில் இணையதள சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளதாக அதிகார பூர்வ அறிவிப்பை நாகலாந்து அரசு வெளியிட்டுள்ளது. மேலும் எல்லையோர கிராமங்களை அப்பாவி மக்களை பயன்படுத்தி பயங்கரவாதிகள் ஊடுருவுவது சமீப காலமாக அதிகரித்துள்ளது எல்லையோர மக்களிடையே அச்சத்தை உண்டுபண்ணியுள்ளது.

….உங்கள் பீமா