Thursday, March 28, 2024
Home > செய்திகள் > தமிழன் பாத்ரூம் கழுவுனா பிளைட் டிக்கெட்..? இது தெரியுமா மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு..?

தமிழன் பாத்ரூம் கழுவுனா பிளைட் டிக்கெட்..? இது தெரியுமா மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு..?

6-3-22/16.16pm

சென்னை : உக்ரைன் ரஷ்யா போர் ஆரம்பிக்கும் முன்னரே இந்திய மோடி அரசு உக்ரைனில் இருக்கும் இந்தியத்தூதரகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலமாக போர்க்கால சூழலை உணர்ந்து உக்ரைன்வாழ் இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

மேலும் சரக்கு விமானம் உட்பட இந்திய விமானங்களை உக்ரைனில் நிறுத்தியது. இதையெல்லாம் கண்டுகொள்ளாத மக்கள் போர் ஆரம்பித்த பின்பு தங்களை காப்பாற்ற ஆளே இல்லையா என வீடியோக்களை வெளியிட்டிருந்தனர். ஆனால் போர் நடந்த சமயத்திலும் இந்திய மோடி அரசு துரிதமாக செயல்பட்டு உயிரிழப்பின்றி அனைத்து இந்திய மாணவர்களையும் மீட்டுக்கொண்டு வருகிறது.

இதனிடையே மாணவர்களை மீட்க ஆபரேஷன் கங்கா எனும் பெயரில் மீட்புக்குழு ஒன்றை அமைத்த மத்திய அரசு நான்கு அமைச்சர்களை நியாயமித்தது. இந்நிலையில் எதிர்க்கட்சியை சேர்ந்த சில மாணவர்கள் ரோஜா எதற்கு எனவும் என்னை வீட்டில் பத்திரமாக இறக்கிவிடவில்லை. சொந்த காசு செலவழித்து சென்றேன் எனவும் இந்தியாவை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்டுக்கொண்டிருக்க தமிழக மாணவி ஒருவர் திமுக குடும்ப தொலைக்காட்சியான கலைஞர் செய்திகளுக்கு பேட்டியளித்தது இன்னும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

`

இந்திய அரசு மீட்டுக்கொண்டுவந்த மாணவி பேட்டியளிக்கையில் ” முதலில் ஹிந்தியிலேயே அறிவிக்கிறார்கள். அதன்பின்னர் நாங்கள் கேட்டால் ஆங்கிலத்தில் அறிவிப்பு கொடுக்கிறார்கள். இந்திய பெண் அதிகாரி ஒருவர் எங்களை பாத்ரூம் கழுவ சொன்னார். கழுவினால் தான் விமானத்தில் இடம் கிடைக்கும் என கூறினார்.

தங்க வசதியில்லை. பாத்ரூம் வசதியில்லை. எங்களை கழுவ சொன்னவர் யார் என தெரியாது” என கூறியுள்ளார். இல்லாத பாத்ரூமை யார் கழுவ சொன்னது என்றும் கூறவில்லை. அந்த அதிகாரியின் பெயரையும் கூறவில்லை. கழுவச்சொன்ன அதிகாரி எந்த பதவியில் இருக்கிறார் என்றும் கூறவில்லை. இது அப்பட்டமாக இந்திய அரசின் மீது கூறப்படும் அபாண்டமான குற்றசாட்டு என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

```
```

மேலும் இந்தியா தவிர மற்ற நாடுகள் தங்கள் மக்களை மீட்க எந்த ஒரு முயற்ச்சியும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே டெல்லி விமான நிலையத்திற்கு வந்தடைந்த மாணவர்களை நேரடியாக அமைச்சர்கள் சென்று வரவேற்றனர்.

அமைச்சர் கைகூப்பி வரவேற்கும்போது மாணவர்கள் என அழைக்கப்படுபவர்கள் யாரும் பதில் மரியாதை தரவில்லை என்பது பலரையும் முகம்சுளிக்க வைத்துள்ளது.

…..உங்கள் பீமா