28-1-22/16.20pm
சென்னை : அரியலூர் மாணவி இறந்த விவகாரத்தில் அந்த குடும்பத்தினருக்கு இன்னும் நீதிகிடைக்காமல் இருக்கும் நிலையில் மேலும் ஒரு மாணவி பாலியல் பலாத்காரத்துக்கு ஆட்படுத்தப்பட்டு வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ள்ளதாக தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை வீடியோ வெளியிட்டிருப்பது புதிய பூகம்பத்தை கிளப்பியுள்ளது.
அந்த வீடியோவில் “ஓமலூர் சுகன்யா ஞாபகம் இருக்கிறதா. பட்டியலினத்தை சேர்ந்த சுகன்யா சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்கி படித்து வந்தார். 2006ஆம் ஆண்டு நவம்பர் 16 அன்றிலிருந்து சுகன்யாவை திடீரென காணவில்லை. இந்நிலையில் நவம்பர் 18ல் பள்ளிவளாகத்தில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தார்.
வழக்கை விசாரித்த டிஎஸ்பி 2006 டிசம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவி குறைவான மதிப்பெண் பெற்றதால் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தார். இதையே அந்த பள்ளி நிர்வாகமும் கூறிவந்தது. இதனிடையே மாநில டிஜிபி உத்தரவின்பேரில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அவர்களின் விசாரணையில் பிரேதபரிசோதனை அறிக்கை பேரதிர்ச்சியை அளித்துள்ளது.

மாணவியின் கருப்பையில் விந்தணுக்கள் காணப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கை எடுத்துரைத்துள்ளது. பாலியல் பலாத்காரத்தால் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் கிளம்பிய நிலையில் அந்த தகவல் மூடிமறைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. அத்யந்த[பின்னர் 2006முதல் 2010 வரை இந்த வழக்கு என்ன ஆனது என தெரியவில்லை. இந்த நேரத்தில் ஆட்சியில் இருந்தது திமுக. அதனால் வழக்கு கிடப்பில் போடப்பட்டதாக சொல்லப்படுகிறது.

ஊர்மக்கள் ஒன்றுகூடி போராட ஆரம்பிக்க சிபிசிஐடி அதிகாரிகள் மீண்டும் விசாரணையை தொடங்கினர். அதில் பட்டியலின மாணவி கொடூரமாக கற்பழிக்கப்பட்ட சம்பவத்தை வெளிக்கொண்டு வந்தனர். அதன்பின்னர் எட்டுபேரை சந்தேக வளையத்திற்குள் கொண்டுவந்தனர். அதில் சிலர் பாதிரியார்கள் என்றும் அதிலும் ஆறுபேர் ஐம்பது வயது கடந்தவர்கள் என்றும் தெரியவந்தது.
ஆனால் இன்றுவரை அந்த வழக்கில் கைதுநடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் யாரையும் கைதுசெய்யவில்லை எனவும் சொல்லப்படுகிறது. தற்போது இறந்த மாணவியும் சுகன்யாவும் FIHM நடத்தும் பள்ளியில் பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது” என அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் நியாயத்திற்கான எங்களுடைய போராட்டம் தொடரும் என தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
….உங்கள் பீமா