Friday, March 29, 2024
Home > செய்திகள் > அரியலூரில் காவல்துறை அத்துமீறல்..!! உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட இந்துமுன்னணியினர் மீது தாக்குதலா..!??

அரியலூரில் காவல்துறை அத்துமீறல்..!! உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட இந்துமுன்னணியினர் மீது தாக்குதலா..!??

திமுக தலைமையிலான தமிழக அரசு விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்ததையடுத்து தமிழகமெங்கும் இந்து அமைப்பினர் சார்பில் சாத்வீக முறையில் போராட்டம் நடைபெற்றது. அதையும் மீறி பொதுமக்களை காவல்துறையினர் அராஜகமான முறையில் தடுத்து நிறுத்தியதாக இந்து முன்னணி அமைப்பினர் குற்றசாட்டை முன்வைத்தனர்.

தமிழகத்தில் உள்ள சிலைகூடங்களில் அத்துமீறி நுழைந்த காவல்துறையினர் அங்கிருந்த விநாயகர்சிலைகளை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் சிலை செய்யும் கூலித்தொழிலாளர்களையும் தாக்கியதாக இந்து முன்னணி அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

`

இந்நிலையில் இன்று அரியலூரில் தனியார் இடங்களில் மற்றும் வீடுகளில் வைத்து வணங்கிய விநாயகர் சிலைகளை அத்துமீறி தூக்கி சென்ற அடாவடி போக்கை கண்டித்து இந்து முன்னணியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

```
```

அங்கு வந்த அரியலூர் டிஎஸ்பி மதன் உண்ணாவிரதம் இருந்த இந்துமுன்னணி அமைப்பினரிடம் கடுமையாக நடந்து கொண்டிருக்கிறார். அதில் சில தொண்டர்கள் காயப்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. நேற்று சென்னை பெசன்ட்நகர் திருச்சபையில் கூட்டம் கூடியதை கண்டிக்காத காவல்துறை இந்துக்களை மட்டும் ஓரவஞ்சனை செய்வது ஏன் என இந்து அமைப்பினர் கேள்விகளை எழுப்புகின்றனர்.

…உங்கள் பீமா