Saturday, November 9, 2024
Home > செய்திகள் > Live.. தோனி என்ன சொன்னார் தெரியுமா ?? அதிர்ச்சியில் ரசிகர்கள்

Live.. தோனி என்ன சொன்னார் தெரியுமா ?? அதிர்ச்சியில் ரசிகர்கள்

இன்று 2 மணியளவில் சமூக வலைதளங்களில் நேரலையில் வந்த கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி ஓரியோ பிஸ்கட்டுகளை ‘முதல் முறையாக’ இந்தியாவில் அறிமுகப்படுத்தினார்.

இன்று 2 மணிக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போவதாக நேற்றைய தினம் தனது சமூகவலைதள பக்கங்களில் பதிவு ஒன்றை தோனி பதிவிட்டிருந்தார். இதனையடுத்து அது என்ன அறிவிப்பாக இருக்கும் என பல்வேறு ஊகங்கள் வெளியாக தொடங்கிவிட்டன. அவர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்போகிறாரா என்ற கேள்விகளும் எழத்தொடங்கின.

இந்நிலையில் இன்று 2 மணிக்கு நேரலை  வந்த அவர், ஓரியோ பிஸ்கட்டுகளை  ‘முதல் முறையாக’ இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறேன் என தெரிவித்தார். இதனை குறுக்கிட்ட ஒருவர், ஓரியோ தான் ஏற்கனவே அறிமுகமாகிவிட்டதே என கேட்டார். அதற்கு பதிலளித்த தோனி. “2011ல் ஓரியோ அறிமுகமானது. அப்போது இந்தியா உலக கோப்பையை வென்றது. அதேபோல், இந்தாண்டு ஓரியோவை இந்தியாவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தி வைக்கிறேன். அப்போ?” என கேள்வியுடன் முடித்தார்.

`

ஓரியோ இந்தியாவும் மஹியும் இணைந்து 2011 ஆண்களுக்கான கிரிக்கெட் உலகக் கோப்பையைப் பற்றிய குறிப்பைக் கொடுத்து ஓரியோவை முதன்முறையாக இந்தியாவில் அறிமுகப்படுத்தினர். ஓரியோ 2011 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது, அதே ஆண்டில் இந்தியா கோப்பை வென்றது. வரவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு அணி தயாராகி வரும் நிலையில், ஓரியோ நிறுவனம் மீண்டும் அதே விளம்பரத்தை அதேபோல தோனியை வைத்து ரீகிரியேட் செய்துள்ளனர் . பெரிதாக எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இது மிக பெரிய ஏமாற்றத்தையையே தந்துள்ளது . 

```
```

what dhoni said in Fb live Tamil