Friday, June 9, 2023
Home > செய்திகள் > லட்சத்தீவுகள்; எழுபது ஆண்டுகால வரலாற்றை மாற்றி எழுதிய பிஜேபி..!

லட்சத்தீவுகள்; எழுபது ஆண்டுகால வரலாற்றை மாற்றி எழுதிய பிஜேபி..!

21-12-21/10.56am

லட்சத்தீவு : கிட்டத்தட்ட பல எழுபது ஆண்டு கால வரலாற்றை மாற்றி எழுதியிருக்கிறது மத்திய பிஜேபி அரசு. இந்திய நாடுகளிலேயே மிக சிறியது மற்றும் குற்றங்கள் குறைந்த நாடு லட்சத்தீவு. மேலும் அங்கு காவல்துறையின் எண்ணிக்கையும் மிக மிக குறைவு.

இது ஒருபுறமிருந்தாலும் போதை மாஃபியாக்களின் சொர்க்கபுரி லட்சத்தீவு என்பதை யாராலும் மறுக்க முடியாது. அரபிக் கடலின் வழியே போதைப்பொருட்கள் மற்றும் அதிபயங்கர ஆயுதங்கள் கடத்தப்படுவதுண்டு. முறையான கட்டமைப்பு மற்றும் சோதனை வசதிகள் இல்லாததால் அல்லது ஏற்படுத்தப்படாததால் இந்த போதைப்பொருள் மற்றும் ஆயுத கடத்தல் வெகுவிமரிசையாக நடந்துவந்ததாக சொல்லப்படுகிறது.

இந்தியாவையே அச்சுறுத்திய சம்பவம் சமீபத்தில் நடந்தேறியது. தோராயமாக 3000கோடி மதிப்பிற்க்கும் மேலான போதை வஸ்துக்கள்(Including ak47 riffles) இந்திய கடலோர காவல்படையினரால் (ICG) யால் லட்சத்தீவு அருகே உள்ள மினிகாய் எனும் தீவில் மடக்கிப்பிடிக்கப்பட்டது. பிடிபட்ட படகுகள் சீனாவை சேர்ந்தவை என்று சொல்லப்படுகிறது. கடந்த மார்ச் 18ல் நடந்த இந்த சம்பவம் லட்சத்தீவின் லட்சணத்தை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது.

`

இந்நிலையில் கடந்த 70 வருடங்களாக பள்ளிகளில் வெள்ளிக்கிழமை கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டு அதுவே பலவருடங்களாக தொடர்ந்து வந்திருக்கிறது. லட்சத்தீவு அட்மினிஸ்ட்ரேட்டரான பிரபுல் க்ஹோடா படேல் நேற்று ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் இனி வெள்ளிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது. அதற்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமை மட்டுமே விடுமுறை என தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பிற்கு லட்சத்தீவை சேர்ந்த பல்வேறு இஸ்லாமிய தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் இதே போல நடைமுறையை தொடர்ந்த பள்ளியின் மீது யோகி அரசு நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கர்நாடகா மங்களூர் அருகே உள்ள பிஸ்கல் எனும் பகுதியிலும் வெள்ளிக்கிழமை விடுமுறை நடைமுறையிலிருப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

……உங்கள் பீமா