Thursday, March 28, 2024
Home > செய்திகள் > சிக்கிய உணவு வழங்கல் துறை திமுக அமைச்சர்..? வெளியான ஆதாரங்கள்..!

சிக்கிய உணவு வழங்கல் துறை திமுக அமைச்சர்..? வெளியான ஆதாரங்கள்..!

சென்னை : டெண்டர் விதிமுறைகளை மதிக்காமல் ஆரம்பித்து மூன்றே மாதங்களான நிறுவனத்திற்கு சத்துணவு முட்டை வழங்க டெண்டர் கொடுத்திருப்பது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஏற்கனவே தமிழக அரசின் டெண்டரில் கலந்து கொண்டு தரமற்ற முட்டைகளை வழங்கிய கிறிஸ்டி எனும் நிறுவனமே பெயரை மாற்றி கிசான் எக்கனாமிக்ஸ் பிரைவேட் லிமிடெட் எனும் பெயரில் மீண்டும் கலந்துகொண்டு சத்துணவு முட்டை வழங்குவதற்கான உரிமத்தை பெற்றுள்ளது.

இதுகுறித்து உமாபதி எனும் சமூக ஆர்வலர் தகவலறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் சில விளக்கங்களை பெற்றுள்ளார். மேலும் அவர் தனது சமூக வலைதளத்தில் “கடந்த 11.08.2021 அன்று தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு ICDS மூலமாக முட்டை சப்ளை செய்ய டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டர் மதிப்பு சுமார் 500 கோடி ரூபாய். முக்கியமாக இது குழந்தைகள் சாப்பிடும் முட்டை என்பதால் முதலில் அந்த டெண்டர் நெறிமுறைகளை பார்ப்போம்.

`

குறைந்தபட்சம் 3 வருடங்களுக்கு டெண்டர் கோரும் நிறுவனம் முட்டை சப்ளை செய்து இருக்க வேண்டும். கோழி பண்ணை குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இயங்கி இருக்க வேண்டும். அக்மார்க் தரசான்று,FSSAI License போன்றவை இருக்க வேண்டும் RTI மூலம் தகவல் கேட்டதில் நான்கு மண்டலத்திலும் டெண்டரில் பங்கு பெற்ற நிறுவனங்களும் அவர்கள் கோரிய விலையும் உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளேன்.

இறுதியாக யார் டெண்டரில் வெற்றி பெற்றார்கள் என்ற விபரம். இப்போது நாம் பார்க்க போவது ஒவ்வொரு கம்பெனியின் பின்புலம் பற்றி தான். முதலில் மண்டலம் 1 வெற்றி பெற்ற Natural Food Commercials Private Limited என்கிற கம்பெனி தொடங்கிய நாள் 13/07/2021. ஆம் விடியல் ஆட்சி வந்த பிறகு தான் கம்பெனியே தொடங்கப்பட்டு உள்ளது. மண்டலம் 1ல் அடுத்த கம்பெனி Kisan Economics Private Limited இந்த கம்பெனி ஆரம்பிக்கப்பட்ட நாள் 02/11/2020.

மேற்குறிப்பிட்ட இரண்டு கம்பெனிகளும் இரண்டு மண்டலங்களுக்கு டெண்டர் வெற்றி பெற்று இருப்பதை நீங்கள் காணமுடியும். டெண்டர் கோரும் நிறுவங்களுக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும் என்கிற போது.. டெண்டர் ஆரம்பிக்கிறதுக்கு ஒரு மாதம் முன்னாடி தான் தொடங்கப்பட்ட ஒரு புது நிறுவனத்தை குழந்தைகள் சாப்பிடும் முட்டை சப்ளை செய்ய டெண்டர் கொடுத்தது எதனால்.

```
```

ஏற்கனவே பல புகார்கள் உள்ள கிறிஸ்டி நிறுவனம் தான்.
https://vikatan.com/government-and-politics/crime/130571-christy-again-at-eggs-tender-shocking-information
தலைவர் ஆட்சியில் Kisan Economics Private Limitedனு டெண்டர் வெற்றி அடைந்து இருப்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்” என ஆதாரங்களுடன் பதிவிட்டுள்ளார்.

இதில் நாமக்கல்லை சேர்ந்த தங்கவேல் செல்வகுமார் என்பவர் கிறிஸ்டி நிறுவனத்தின் இயக்குனராகவும் கிசான் எக்கனாமிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்சிக்கு வந்த ஆறே வாரங்களில் செந்தாமரை ஸ்டாலின் மற்றும் சபரீசன் பெயர்களில் எட்டு நிறுவனங்கள் உதயமான நிலையில் தற்போது புதிதாக முளைத்த நிறுவனத்திற்கு டெண்டர் கொடுத்த விவகாரம் பொதுமக்கள் மத்தியில் சலசலப்பை உண்டுபண்ணியுள்ளது.

……உங்கள் பீமா