Saturday, July 27, 2024
Home > செய்திகள் > ராமகிருஷ்ணா மிஷன் திருப்பதி தேவஸ்தானம்…! மத்திய அரசு அதிரடி..!

ராமகிருஷ்ணா மிஷன் திருப்பதி தேவஸ்தானம்…! மத்திய அரசு அதிரடி..!

8-1-22/10.32am

டெல்லி : சமீபத்தில் 4000 அறக்கட்டளைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான அதிகாரத்தை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது மத்திய உள்துறை அமைச்சகம்.

அன்னை தெரேசா சேரிட்டி மிஷன் டிரஸ்ட் அமைப்புக்கான அங்கீகாரத்தை மத்திய அரசு ரத்துசெய்து விட்டதாக மமதா பானர்ஜி புத்தாண்டு அன்று வதந்தியை கிளப்ப அது இந்தியா முழுவதும் தீயாய் பரவியது. மத்திய உள்துறை அமைச்சகம் அதுகுறித்த விளக்க அறிக்கை ஒன்றையும் அளித்திருந்தது. மேலும் தெரேசாவுக்கு சொந்தமான மிஷனரி அமைப்பு FCRA அங்கீகாரத்தை புதுப்பிக்க விரும்பவியலையென்றும் தங்களது அனைத்து கணக்குகளையும் முடக்க விரும்புவதாகவும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது.

`

இந்நிலையில் தற்போது வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதற்கான FCRA உரிமத்தை புதுப்பிக்காத ராமகிருஷ்ணா மிஷன் ஷீரடி சாயிபாபா அறக்கட்டடளை மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆகிய ஆன்மீக அமைப்புகளின் அங்கீகாரத்தை நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இனி சட்டப்படி இந்த அமைப்புகள் வெளிநாட்டிலிருந்து நிதி பெறமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

```
```

மத்திய அரசு சிறுபான்மையினர் அமைப்பு பெரும்பான்மையினர் அமைப்பு என எந்த பேதமும் பார்த்ததில்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம். விதிமீறல்களில் ஈடுபடும் எந்த அமைப்பாக இருந்தாலும் மத்திய அமைச்சகம் தனது இருக்ப்புக்கரம் கொண்டு அடக்கும் என பிஜேபியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

…..உங்கள் பீமா