Monday, February 10, 2025
Home > செய்திகள் > மிரட்டும் அமைச்சர்..! துரோகிகளை கண்டிக்குமா இந்திய ராணுவம்..?

மிரட்டும் அமைச்சர்..! துரோகிகளை கண்டிக்குமா இந்திய ராணுவம்..?

13-3-22/16.20PM

தெலுங்கானா : நேற்று சட்டமன்ற கேள்விநேரத்தில் பேசிய ஐடி அமைச்சர் கே.டி.ஆர்.ராவ் ராணுவ அதிகாரிகளை மிரட்டி பேசினார். இது பிஜேபியினரை கொந்தளிக்க செய்தது.

ஹைதராபாத்தில் மூலோபாய நல மேம்பாட்டுத்திட்டம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. அப்போது கேள்விநேரத்தில் பேசிய ராவ் ” ராணுவ கன்டோன்மென்ட்டுகளுக்கு குடிநீர் வழங்கல் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்படும். கண்டோன்மெண்ட் சாலைகளை அவர்கள் நினைத்தால் திறப்பதும் நினைத்தால் மூடுவதும் ஏற்புடைய செயல் இல்லை. இதை அனுமதிக்க முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.

தெலுங்கானாவில் உலா செகுந்திராபாத் அருகே ராணுவ குடியிருப்புகள் மற்றும் பயிற்சி கல்லூரிகள் அமைந்துள்ளன. ராணுவ தளங்கள் ராணுவ வீரர்கள் குடியிருப்பு பகுதிகளுக்கென தனியான சாலை இந்தியாவெங்கும் அமைந்துள்ளது. இது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு எப்போதும் அனுமதிக்கப்படாது. பிஜேபி ஆட்சியமைந்த உடன் பொதுமக்கள் நலன் கருதி அதிமுக்கிய சாலைகளை தவிர மற்ற சாலைகளை மக்கள் பயன்படுத்த ராணுவ அமைச்சகத்திடம் கோரிக்கையெழுப்பியிருந்தது.

`

அதை தொடர்ந்து பல சாலைகள் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டது. உயர்பாதுகாப்பு தேவைப்படும் ராணுவ முகாம்கள் கூடங்கள் இருக்கும் சாலைகள் பாதைகள் ராணுவத்தால் மூடப்பட்டிருக்கும். செக்குந்திராபாத் கிளப்பை ஒட்டியுள்ள சபில்குடா கண்டோன்மெண்ட் சாலைகள் உயர்பாதுகாப்பிற்கு உட்பட்டவை.

அந்த சாலைகளை திறக்காவிட்டால் அனைத்து அடைப்படை வசதிகளும் நிறுத்தப்படும் என மாநில அமைச்சரே மிரட்டியிருப்பது மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத் அவர்களின் வார்த்தையை நினைவு கூறுகிறது. 2017ல் மறைந்த முப்படை நாயகர் பிபின் கூறுகையில் இந்தியா 2.5 பிரண்ட் வாருக்கு (2.5FRONT வார்) தயாராய் இருக்கிறது என கூறினார். அதாவது பாகிஸ்தான் சீனா மற்றும் உள்நாட்டு துரோகிகள் என குறிப்பிட்டிருந்தார்.

```
```

அப்போது அவரை பலர் விமர்சித்திருந்தனர். அவர் சொன்னது போல ராணுவத்தையே மிரட்டும் அமைச்சரை யார் என அடையாளம் காணவேண்டும் எனவும் அமைச்சரின் பேச்சு இந்திய இறையாண்மையை பாதிக்கும் விதத்தில் இருக்கிறது எனவும் ஹைதராபாத்தில் உள்ள ராணுவத்தளத்தை அகற்ற சந்திர சேகர் ராவ் அரசு முயற்சிப்பதாகவும் எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

சமீபத்தில் ட்ரெக்கிங் சென்ற பாபு என்பவர் மலைமுகடில் மாட்டிக்கொண்டு உயிருக்குபோராடியபோது மெட்ராஸ் ரெஜிமென்ட் ராணுவ வீரர்களே வரை கைப்பற்றினார்கள். காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை எந்த ஒரு புயல்சேதமோ இயற்கைப்பேரழிவோ துணிச்சலாக உயிரைப்பணயம் வைத்து மக்களை காப்பாற்றுவது இந்திய ராணுவத்தினரே. அவர்களை முன்னிறுத்த தவறினாலும் அவமரியாதை செய்ய அனுமதிக்க கூடாது என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

…..உங்கள் பீமா