8-1-22/13.20pm
சண்டிகர் ; கடந்த டிசம்பர் 27 அன்று சண்டிகரில் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மீ பிஜேபி மற்றும் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட்டன. அதில் ஆம் ஆத்மீ காங்கிரசை பின்னுக்கு தள்ளி பிஜேபியுடன் சரி நிகர் நெருக்கடி கொடுத்திருந்தது.
சண்டிகர் மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 35 வார்டுகளில் ஆம் ஆத்மீ 14 சீட்டுகளையும் பிஜேபி 12 சீட்டுகளையும் காங்கிரஸ் எட்டு சீட்டுகளையும் வென்றிருந்தது. அதனால் மேயர் தேர்தலில் வெகு சுலபமாக ஆம் ஆத்மீயே வெற்றிபெறும் என கணிப்புக்கள் வெளிவந்தது. ஆனால் நேற்று நடந்த மேயர் தேர்தலில் காங்கிரஸ் பங்கு கொள்ள மறுத்துவிட்டது.
அதனால் கடைசி நேர பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஆம் ஆத்மீ தனது வேட்பாளர்கள் பாதி பேரை ஹிமாச்சல பிரதேசம் பராக்கிற்கும் மீதிப்பேரை டெல்லிக்கும் அனுப்பி வைத்திருந்தது. பிஜேபி தனது வேட்பாளர்களை சிம்லாவில் தங்க வைத்திருந்தது. காங்கிரஸ் தனது வேட்பாளர்களை ஜெய்ப்பூருக்கு அனுப்பி வைத்ததுடன் தேர்தலில் கலந்துகொள்ளப்போவதில்லை என அறிவித்திருந்தது.
இந்நிலையில் நேற்று வாக்களிக்க திரும்பிய அனைத்து வேட்பாளர்களும் தங்கள் வாக்குகளை செலுத்தினர். இதில் பிஜேபி 14 வாக்குகளும் ஆம் ஆத்மீ 13 வாக்குகளும் பெற்றன. இதனால் மீண்டும் தொடர்ந்து இரண்டாவது முறையாக மேயர் பதவியை பிஜேபி தக்கவைத்துக் கொண்டது. இந்த மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்ததால் சரபஜித் கவுர் தில்லியன் பிஜேபி பெண் மேயராக பதவியேற்கிறார். அரசியலுக்கு இவர் புதுமுகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற முறை பிஜேபி மாநகராட்சி தேர்தலில் 20 இடங்களை பெற்றிருந்தாலும் ஆம் ஆத்மியின் வளர்ச்சி அதற்க்கு கடும் போட்டியை அளித்து 14 சீட்டுக்களாக குறைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் உள்ளூர் எம்பியான கிர்ரென் வாக்கும் SAD கவுன்சிலர் வாக்கும் பிஜேபிக்கு பெரும் உதவியாக அமைந்தது.
சீனியர் டெபுட்டி மேயருக்கு தலிப் சர்மா மற்றும் டெபுட்டி மேயர் பதவிக்கு அனுப் குப்தாவும் பிஜேபி சார்பில் போட்டியிட்டனர். மேயர் வெற்றியை புறக்கணிப்பதாக கூறி ஆம் ஆத்மி தற்போது போராட்டம் நடத்தி வருகிறது.
….உங்கள் பீமா