தாலிபான் தீவிரவாதிகள் ஒருவழியாக ஆப்கானை கைப்பற்றிவிட்டனர். ஆனால் ஜனநாயகம், குடியரசு, மக்கள் நலன், வெளிநாட்டு விவகாரங்கள் என எதைப்பற்றியும் அறியாத ஒரு கும்பலிடம் ஆப்கான் சிக்கியிருக்கிறது என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
அதற்கேற்றாற்போல ஆப்கனிஸ்தான் மத்திய வங்கியின் உறுப்பினர் ஷா மெஹ்ராபி அமெரிக்க கருவூலத்துறைக்கும் அமெரிக்க அரசுக்கும் செய்தி அனுப்பியுள்ளார். ஆஃப்கான் மக்கள் பசி பட்டினியால் வாடுவதாகவும் அதனால் நிதிஉதவி செய்யுமாறும் கேட்டிருப்பதாக அல்ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் “ஆஃப்கான் பொருளாதாரம் வீழ்ச்சியடையாமல் பாதுக்காக்க வேண்டியது அமெரிக்க மற்றும் இதர உலகநாடுகளின் பொறுப்பு. மக்களை காப்பாற்றவேண்டுமெனில் மத்தியவங்கியை தலிபான் அமைப்பு பயன்படுத்த வேண்டும் . அங்கு நிதி இல்லாததால் அமெரிக்க அரசு மற்றும் IMF (International Monetary Fund) போதிய நிதியை வழங்கவேண்டும்.
தாலிபான்களிடமிருந்து தப்பிக்க அமெரிக்கா எப்படி பேச்சுவார்த்தை நடத்தியதோ அதே போல நிதி வழங்கவும் தாலிபான்களுடன் பேசி மக்களை காப்பாற்ற முயல வேண்டும். தாலிபான்கள் ஓபியம் உற்பத்தியை பெருக்கியும் அமெரிக்கா விட்டுச்சென்ற ஆயுதங்களை விற்றும் தங்களை காப்பாற்றிக் கொள்வார்கள். ஆனால் மக்களை காப்பற்ற அமெரிக்கா முன்வரவேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
தலிபான் கைப்பற்றும் முன்பு மத்தியவங்கியின் தலைவராக இருந்த அஜ்மல் அஹமதி கூறுகையில் ” 7மில்லியன் மதிப்பிலான நிதி பாண்டாகவும் தங்கமாகவும் உள்ளது. அண்ணல் நோட்டுக்கள் 0.02 சதவிகிதம் மட்டுமே இருப்பில் உள்ளது. இந்த நிதி அரசை வழிநடத்த போதாது. ஆப்கனின் பொருளாதார வீழ்ச்சிக்கு இது வழிவகுக்கும்”. என கூறினார்.
…உங்கள் பீமா