பாலிவுட் நடிகர்கள் சல்மான்கான் அபிஷேக்பச்சன் , அனுபம் கெர், அக்ஷய் குமார், பர்ஹான் அக்தர் ராகுல் ப்ரீத்தி சிங், தெலுங்கு நடிகர் ரவிதேஜா மற்றும் ஷார்மிகவூர் உட்பட 37 திரைப்பட பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட்டர் ஹர்பஜன்சிங் ஆகியோர் மீது இன்று ஐபிசி 228 ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2019ல் ஹைதராபாத்தில் ஒரு கால்நடை மருத்துவர் கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். அவரை அருகில் உள்ள ஆளில்லா இடத்தில் வைத்து எரித்து விட்டனர். அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிலரை போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றது.
சம்பவத்தின் போது மேலே குறிப்பிட்ட திரைப்பட நடிகர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்தி இணையதளத்தில் பதிவிட்டிருந்தனர். 2019 டிசம்பர் 1 அன்று சல்மான் “வெட்டி பேச்சாகவோ வெறும் பிரசாரமாகவோ இருக்க கூடாது. தண்டனை வழங்க வேண்டும்” என பதிவிட்டு கொல்லப்பட்டவரின் அடையாளத்தை வெளியிட்டிருந்தார்.
அனுபம்கெர் மத்திய உள்துறை அமைச்சரிடம் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இது போன்று பொதுவெளியில் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியிடுவது சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும். இதை குறிப்பிட்டு டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இன்று இந்த வழக்கில் அனைவர் மீதும் ஐபிசி 228A பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்க்கு அபராதம் அல்லது சிறை தண்டனை இரண்டில் ஏதேனும் ஒன்று வழங்கப்படலாம்.