திமுக அரசு விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தடைவிதித்ததையடுத்து இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் பல வகைகளில் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்து முன்னணி சார்பில் நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
தமிழக பிஜேபி தலைவர் கே அண்ணாமலை அவர்கள் தமிழக மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். “சாத்வீக முறையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தபால் அட்டை மூலம் தெரிவிப்போம்”. என கூறியிருந்தார்.
அதையடுத்து இன்று ஆயிரக்கணக்கானோர் தபால் அட்டை மூலம் முதல்வர் முக ஸ்டாலினுக்கும் திருமதி.துர்க்கா ஸ்டாலினுக்கும் தங்கள் வாழ்த்துக்களை தபால் அட்டை மூலம் தெரிவித்து வருகின்றனர். இன்று மட்டுமே ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அனுப்பியுள்ளதாக தெரிகிறது.
தடா பெரியசாமி முதல் பல்வேறு தலைவர்கள் தங்கள் வாழ்த்து மடல்களை அனுப்பியுள்ளனர். இன்னும் இரு நாட்களில் எண்ணிக்கை இன்னும் கூடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கோபாலபுரம் ஸ்தம்பிக்கும் என நம்புவதாக இந்து அமைப்பினர் கருத்து தெரிவிக்கின்றனர்.
…உங்கள் பீமா