Friday, March 29, 2024
Home > அரசியல் > சூடுபிடிக்கும் தேர்தல் களம்..! முன்னாள் உள்துறை அமைச்சர் ராஜினாமா..! காந்தியின் கனவு நிறைவேறுகிறதா..?

சூடுபிடிக்கும் தேர்தல் களம்..! முன்னாள் உள்துறை அமைச்சர் ராஜினாமா..! காந்தியின் கனவு நிறைவேறுகிறதா..?

25-1-22/13.25pm

உத்திர பிரதேசம் : உத்திரபிரதேசத்தில் வருகிற பிப்ரவரி 10முதல் மார்ச் ஏழு வரை எழுகட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் கட்சித்தாவல் சம்பவங்கள் மாநில அரசியலில் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது.

பிஜேபியிலிருந்து மூன்று அமைச்சர்கள் மற்றும் மூன்று எம்.எல்.ஏக்கள் விலகிய நிலையில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடியிலிருந்து முக்கிய தலைவர்கள் பிஜேபியில் சேர்ந்தவண்ணம் உள்ளனர். இதில் முக்கியமாக முன்னாள் காங்கிரஸ் உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.

காங்கிரஸ் முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் ரத்தன் பிரதாப் நரேன் சிங் என அழைக்கப்படும் ஆர்.பி.என். சிங் இன்று தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார். இவர் உத்திரபிரதேச குஷிநகர் எம்பியும் கூட. இவரை காங்கிரஸ் உத்திரபிரதேசம் மற்றும் ஜார்கண்ட் தேர்தல்குழு தலைவராக நியமித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

`

அவர் தனது ராஜினாமா பற்றிய குறிப்பில் ” இன்று நாம் அனைவரும் குடியரசு உருவான தினத்தை உவகையுடன் கொண்டாடுகிறோம். இதே நாளில் எனது அரசியல் வாழ்வில் புது அத்தியாயத்தை தொடங்குகிறேன்.ஜெய்ஹிந்த்” என குறிப்பிட்டுள்ளார். இன்று அல்லது நாளை இவர் பிஜேபியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்திரப்பிரதேசத்தின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான ஜிதின் பிரசாத் கடந்த வருடம் ராஜினாமா செய்துவிட்டு பிஜேபியில் இணைந்து தற்போது அமைச்சராக உள்ளார்.

```
```

மேலும் மூன்று முறை பத்ராவ்னா தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஆர்.பி.என்.சிங் காங்கிரசின் பிரபல தலைவர் ஆவார். தற்போது இவரும் வெளியேறியிருப்பதால் காந்தியின் கனவான காங்கிரசை கலைப்போம் என்ற முழக்கம் நினைவாகிவிடும் என பிஜேபியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

…..உங்கள் பீமா