2-11-21 / 12.11pm
மஹராஷ்டிரா துணைமுதல்வர் அஜித் பவாரின் 1000 கோடி மதிப்பிலான சொத்துக்களை வழக்கில் சேர்த்துள்ளது வருமானவரித்துறை. இது மகாராஷ்டிரா அரசியலில் பூகம்பத்தைக்கிளப்பியுள்ளது.
நேஷனல் காங்கிரஸ் பார்ட்டி (NCP) தலைவரான சரத் பவார் மீது மகாராஷ்டிரா ஸ்டேட் கோ ஆபரேட்டிவ் பேங்க் (MSCB) 25000 கோடி ஊழல் குற்றசாட்டு ஒன்று அமலாக்கத்துறையில் நிலுவையில் உள்ளது. மேலும் கரும்பு ஆலைகளுக்கு முறைகேடாக வழங்கிய நிதியில் கையாடல் செய்த குற்றச்சாட்டும் விசாரணையில் உள்ளது.
சரத் பவாரின் அண்ணன் மகனான அஜித் பவார் மஹராஷ்டிரா துணைமுதல்வராக பதவி வகிக்கிறார். இவரது அலுவலகம் மற்றும் வீடுகளிலும் துணைமுதல்வரின் சகோதரிகள் வீடு மற்றும் அலுவலகங்களிலும் கடந்த சில தினங்களுக்கு முன் வருமானவரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. அதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது.
அந்த ஆவணங்களிலிருந்து 1000 கோடி மதிப்பிற்கும் மேலான ஐந்து இடங்கள் வழக்கில் இணைக்கப்பட்டிருக்கிறது. அதில் மும்பையின் பிரதான பகுதியான நரிமன் பாய்ண்டில் இருக்கும் நிர்மல் டவர் எனும் கட்டிடமும் அடக்கம்.
சிவசேனா காங்கிரஸ் மற்றும் NCP கூட்டணியில் மஹாராஷ்டிராவில் ஊழல் மற்றும் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக மாநில பிஜேபி தலைமை விமர்சித்து வருகையில் மாநில துணை முதல்வரே வருமான வரித்துறை ரைடில் சிக்கியிருப்பது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
…உங்கள் பீமா
#ncp #dycm #ajitpawar #maharastra