19-11-21/ 10.20am
சென்னை : சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து இடமாறுதலில் வேறு மாநிலம் சென்ற சஞ்சீப் பானர்ஜி கிளம்புகையில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று புயலை கிளப்பியிருக்கிறது. இது குறித்து விளக்கம் அளிக்கவேண்டும் என புதியதமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டாக்டர் ஷ்யாம் கிருஷ்ணசாமி தனது பதிவில் “நீதிபதி சஞ்சீப் பானர்ஜி சாடுவது நீதித்துறையின் மீதா அரசியல் தலைமையின் மீதா சமூகத்தின் மீதா என்பதை அவர் மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும். சாதாரண வழக்கறிஞர்களோ அல்லது குடிமகனோ பாதிக்கப்பட்டாலும் நீதித்துறையை பற்றி விமர்சிக்க முடியாத நிலை இருக்கும் போது, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஒருவர் இதுபோன்று எப்படி சொல்ல முடியும்.
அந்த கருத்து எதன் மீதான தாக்குதல். கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த நீதிபதி கர்ணன் அவர்கள் நீதிபதிகளையும், நீதித்துறையையும் பற்றி ஒரு கருத்தைச் சொன்னதற்காக அவர் உச்ச நீதிமன்றத்தாலேயே தண்டிக்கப்பட்டு கல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டார்” என அதில் தெரிவித்துள்ளார்.
டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் ” நீதிபதி சஞ்சீவ் சஞ்சீப் பானர்ஜி என்னால் இங்கு நிலவும் நிலப்பிரபுத்துவத்தை முற்றிலுமாக ஒழிக்கமுடியவில்லை என கூறியிருக்கிறார். அவர் கூறிய கருத்துக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்” என தனதுஅறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
….உங்கள் பீமா