Friday, March 29, 2024
Home > செய்திகள் > லவ் ஜிஹாத்..? மாட்டிக் கொண்ட மொஹம்மது ஷாகிர் பேகன்..! தூக்கிய காவல்துறை..!

லவ் ஜிஹாத்..? மாட்டிக் கொண்ட மொஹம்மது ஷாகிர் பேகன்..! தூக்கிய காவல்துறை..!

26-12-21/ 18.34pm

உத்திரபிரதேசம் : விடாமல் துரத்தி இந்து பெயரை சொல்லி காதல் வலையில் வீழ்த்திய இளைஞர் பின்னாளில் ஆசைக்கு இணங்க மறுத்ததால் அந்தரங்க வீடியோவை வெளியிடுவதாக மிரட்டியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

மேற்கு உத்திரபிரதேசம் பாக்பத் மாவட்டம் கான்ஷியா நகரில் வசிப்பவர் ஊர்மி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் 11 ம் வகுப்பு பயிலும்போது ஒருவன் பின்தொடர்ந்தே வந்திருக்கிறான். அதன்பின்னர் தன்னை ஒரு இந்து பெயர் சொல்லி அறிமுகமாகி பேசியிருக்கிறான். அதையடுத்து காதல் வலையில் வீழ்ந்த ஊர்மி பின்னாளில் அவனது உண்மையான பெயர் தெரிந்ததும் காதலை முறித்திருக்கிறார்.

கடந்த சில மாதங்களாக பின் தொடர்ந்த மொஹம்மது ஷாகிர் பேகன் தனது இச்சைக்கு இணங்கும்படி வற்புறுத்தியிருக்கிறான். ஊர்மி மறுக்கவே கோபத்தில் தகாத வார்த்தைகளில் பேசிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் கடந்த நவம்பரில் ஊர்மிக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ஊர்மியின் தகப்பனார் சில வருடங்களுக்கு முன்னரே மரணமடைந்து விட்டதால் அம்மா மற்றும் பாட்டியின் அரவணைப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

`

நிச்சயிக்கப்பட்ட மாப்பிளையை சந்தித்த மொஹம்மது ஷாகிர் பேகன் ஊர்மியுடன் இருந்த அந்தரங்க போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை காண்பித்துள்ளான். எப்படியும் நம்மிடம் தான் வரவேண்டும் என்கிற என்கிற விபரீத புத்தியில் இந்த செயலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. கல்யாண மாப்பிள்ளை இதை ஊர்மியிடம் விசாரிக்க அவர் எல்லா உண்மையையும் எடுத்துரைத்திருக்கிறார்.

அதன்பின்னர் மாப்பிள்ளை மற்றும் குடும்பத்தினர் அனைவரும் பாக்ஹ்பட் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து மொஹம்மது ஷாகிர் பேகன் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலும் போக்ஸோவில் கைது செய்து சொந்த பிணையில் தமிழகத்தில் வெளிவிடுவது போல உத்திரப்பிரதேசத்தில் பிணை கொடுக்கமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

```
```

மேலும் கடந்த ஜனவரியிலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை இதேபோல மொத்தமாக 77 வழக்குகள் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உத்திரபிரதேச முதல்வர் யோகியின் அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை இந்த நிகழ்வு மக்களுக்கு எடுத்துக்காட்டியுள்ளது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி யோகியின் அரசை பாராட்டியிருந்தது சுட்டிக்காட்டப்பட்ட வேண்டிய ஒன்று.

….உங்கள் பீமா