Friday, March 24, 2023
Home > செய்திகள் > பதுக்கவும் முடியாது..! பதுங்கவும் முடியாது..! 13109 கோடி வசூல் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பதுக்கவும் முடியாது..! பதுங்கவும் முடியாது..! 13109 கோடி வசூல் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி : ராஜ்யசபாவில் இன்று நடைபெற்ற விவாத்தில் பொருளாதார குற்றவாளிகள் மூவரின் சொத்துக்கள் விற்கப்பட்டு 13109 கோடி வசூல் செய்யப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இன்று ராஜ்யசபாவில் நடைபெற்ற காப்பீடு திட்டங்களுக்கான மசோதாவின் விவாதத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். அபோது பொருளாதார குற்றவாளிகளான நீரவ் மோடி முகுல் சோக்ஷி மற்றும் விஜய் மல்லைய்யா குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அப்போது பேசிய நிதியமைச்சர் மூவரின் சொத்துக்களை விற்று 13109 கோடி நிதி வங்கிகளுக்கு திரும்ப அளிக்கப்பட்டுள்ளது. மூவரும் இந்திய சட்டத்தை எதிர்கொள்ள விரைவில் இங்கு வர இருக்கிறார்கள்.

அவர்கள் மட்டுமல்ல யாராயிருந்தாலும் இந்திய சட்டத்தை மதித்து அதை எதிர்கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டார். மல்லய்யாவின் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் 9000 கோடி மோசடியில் ஈடுபட்டதையடுத்து லண்டனுக்கு தப்பிச்சென்றார். அங்கு அவருக்கு 2017ல் மூன்று வருட ஜாமீனை ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை வழங்கியுள்ளது. அந்த ஜாமீன் காலம் இந்த வருடம் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

`

இன்னொரு தேடப்படும் குற்றவாளிகளான மெகுல் ஷோக்க்ஷி மற்றும் நீரவ் மோடி இருவரும் பஞ்சாப் நேஷனல் பேங்க் மூலம் 6000 கோடிகள் நிதிமுறைகேடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நீரவ் மோடி கீதாஞ்சலி குரூப் ஆப் கம்பெனி மூலம் பலகோடிகள் மோசடி செய்திருப்பதும் குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. இதில் நீரவ் மோடி UKவில் தலைமறைவாக இருப்பதாகவும் மெகுல் சோக்க்ஷி ஆண்டிகுவா நாட்டில் பதுங்கியிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் காங்கிரஸ் தலைவர்கள் பலரின் நேரடி தலையீடு இருந்ததாகவும் அதிலும் தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர் மற்றும் அவரது மனைவி நேரடியாக வங்கி அதிகாரிகளை தொடர்பு கொண்டு பொருளாதார குற்றவாளிகளுக்கு கடன் வழங்க வற்புறுத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

……உங்கள் பீமா