திமுக ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்களில் 10க்கும் மேற்பட்ட இந்துக்களின் வழிபாட்டுத்தலங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டதாக இந்து அமைப்பினர் கோபத்துடன் கொந்தளிக்கின்றனர். இந்நிலையில் திமுக அரசு விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தடைவிதித்ததோடு மட்டுமல்லாமல் காவல் துறை மூலம் சிலைகளை பறிமுதல் செய்தது.
தமிழகமெங்கும் இந்து முன்னணி அமைப்பினர் பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ஓசூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் பக்தர்களால் வழிபாட்டுக்கு வைக்கப்பட்ட விநாயக பெருமான் சிலைகளை யாரோ குப்பையில் வீசி சென்றிருக்கின்றனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் குப்பையில் கிடப்பதை அறிந்த பொதுமக்கள் கோவில் வளாகத்தில் கூடினர். பின்னர் சிலைகள் சுத்தப்படுத்தப்பட்டு ஆலய வளாகத்தில் வைக்கப்பட்டது. காவல்துறையும் அங்கு விரைந்து வந்தது. அங்கு கூடியிருந்த பொதுமக்கள் தெரிவிக்கையில் “ஜலகண்டேஸ்வரர் ஆலய நிவாகத்தின் அலட்சிய போக்கால் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.” என வேதனையோடு தெரிவித்தனர்.
வழிபாடும் கடவுளின் சிலைகள் குப்பையில் கிடப்பதை கண்டா இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்து மனவேதனையோடு நின்றது பார்ப்பவர்களை கண்கலங்க செய்தது.
..உங்கள் பீமா