Saturday, July 27, 2024
Home > செய்திகள் > அரியலூரில் சோகம்..! திமுகவின் அரசியல் நாடகத்துக்கு பலியான அடுத்த மாணவி..!

அரியலூரில் சோகம்..! திமுகவின் அரசியல் நாடகத்துக்கு பலியான அடுத்த மாணவி..!

நீட் தேர்வு காங்கிரசால் முன்னெடுக்கப்பட்டு திமுகவால் அங்கீகரிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த பிஜேபி அதை அமுல்படுத்தியது. இந்த நீட் தேர்வு தகுதியுள்ள ஏழை எளிய மாணவ மாணவிகளை எந்த ஒரு நன்கொடையும் இல்லாமல் அவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றுகிறது.

கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரளா காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மம்தாவின் மேற்கு வங்கம் உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வை ஒருமனதாக ஏற்றுக்கொண்டிருக்க தமிழக திமுக மட்டும் எதிர்த்து நிற்கிறது.

பல கோடி நன்கொடை கொடுத்து படிக்க இயலாத ஏழை எளிய மாணவர்களுக்கு வரப்பிரசாதம் இந்த நீட் தேர்வு. அதற்க்கு முட்டுக்கட்டையாய் திமுக நிற்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இதுவரை திமுகவின் பொய்யான வாக்குறுதியால் 14 உயிர்கள் பலியான நிலையில் இன்று அரியலூரில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

`

அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி நேற்று முன் தினம் நடந்த நீட் தேர்வை சரியாக எழுதாததால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

```
```

அரசு நீட் தேர்வு மையத்தை உருவாக்கி ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்ற உறுதுணையாய் நிற்கவேண்டும் என்று பெற்றோர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

…உங்கள் பீமா