கேரளா கோழிக்கோடு பகுதியில் அமைந்துள்ள மர்கஸுல் இஃஹாசத்தில் கைரியாத்தில் ஹிந்தியா என்ற NGO நிறுவனம் சன்னி முஸ்லீம் தலைவர் ஷேக் அபுபக்கர் அஹமது என்பவருக்கு சொந்தமானது. இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக வெளிநாட்டிலிருந்து நன்கொடையாக பெற்ற 100 கோடிக்கும் மேலான நிதியை அரசுக்கு தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
FCRA விதிகளை மீறியதால் உள்துறை அமைச்சகம் அபுபக்கரின் NGOவுக்கு நேற்று தடை உத்தரவு பிறப்பித்தது. 2000ஆவது ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த NGO அமைப்பு ஆரம்பித்த சில வருடங்கள் முறையாக செயல்பட்டிருக்கிறது. அதன் பின்னர் வரி ஏய்ப்பும் முறைகேடான பணமும் புழங்கத்தொடங்கியதாக சொல்லப்படுகிறது.
உள்துறை அமைச்சக வட்டாரங்கள் இதுகுறித்து தெரிவிக்கையில் ” இந்த NGO அமைப்பின் நிறுவனர் கிராண்ட் முஃப்தி ஆப் இந்தியா என அறியப்படுகிறார். மேலும் ஜாமியா மர்கஸ் சேன்சலராக உள்ளார். ஆல் இந்தியா சன்னி ஜாமியத்துல் உலமாவின் பொதுச்செயலாளராகவும் இருக்கிறார். 2019-20 க்கான கணக்கு வழக்கை தாக்கல் செய்கையில் 50 லட்சத்திற்க்கான நிலம் ஒன்று வாங்கியதை மறைத்திருக்கிறார். 2018 முதல் 2020 வரை மூன்று வருடங்களில் 100 கோடிக்கும் மேலான நிதி வரவை கணக்கில் காட்டாமல் இருக்கிறார்.
அதனால் கடந்த மாதம் 28ம் தேதி சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதையடுத்து அவரது NGO அமைப்புக்கு மறு அறிவிப்பு வரும்வரை தடை விதிக்கப்பட்டிருக்கிறது. செக்சன் 12(4)(a)(vi), செக்சன் 18 மற்றும் செக்சன் 19 FCRA ஆக்ட் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 25000த்திற்கும் மேற்பட்ட NGO அமைப்புகள் FCRA கண்காணிப்பில் உள்ளன. சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் அனைத்து NGOக்கள் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.” என உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
…..உங்கள் பீமா