Friday, April 18, 2025
Home > செய்திகள் > சிறுபான்மையினர் வழிபாட்டுத்தலத்தில் இந்து வியாபாரிகளுக்கு அனுமதியில்லை..?ஆனால்….?

சிறுபான்மையினர் வழிபாட்டுத்தலத்தில் இந்து வியாபாரிகளுக்கு அனுமதியில்லை..?ஆனால்….?

18-12-21/13.52pm

ஆந்திரா : இந்துக்களின் வழிபாட்டுத்தலத்தில் இருக்கும் வியாபார கடைகளுக்கான ஏலத்தில் மாற்று மதத்தினரும் அழைக்கப்பட வேண்டும் என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூலில் உள்ள பிரசித்திபெற்ற மல்லிகார்ஜுன ஆலய நிர்வாகம் சார்பில் வருடந்தோறும் கோவிலை சுற்றியுள்ள கோவிலுக்கு சொந்தமான இடங்களை குத்தகைக்கு அல்லது வாடகைக்கு விடுவது வழக்கம். இங்குமட்டுமல்ல இந்தியாவில் அனைத்து கோவில்களிலும் இதே நடைமுறைதான். தமிழகத்தை பொறுத்தவரை இந்துக்கள் அல்லாதோர் மட்டுமே அதிகமாக கோவில் பிரகாரங்களில் அதை சுற்றியுள்ள இடங்களில் கடை வைத்திருக்கின்றனர் என்பது கண்கூடு.

இந்நிலையில் மல்லிகார்ஜுன ஆலயத்தில்நடைபெறும் ஏலத்தில் மாற்று மதத்தினரும் கலந்துகொள்ள வேண்டும் என பொதுநல மனு ஒன்று உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சந்த்ரசௌத் ” கோவில் வளாகங்களில் மது விற்பனையோ அல்லது சூதாட்டமோ தான் நடைபெற அல்லது விற்க தடை இருக்கிறது. மாற்று மதத்தினர் சிறுவர்களுக்கான பொம்மையை விற்கவோ அல்லது பூஜைப்பொருட்களை விற்கவோ தடை இல்லை” என கூறியுள்ளார்.

`

இதுகுறித்து மேலும் ஆந்திர அரசிற்கு அனைத்து கோவில்களிலும் இதே நடைமுறையை பின்பற்ற வலியுறுத்தி உத்தரவிட்டுள்ளார். இந்த நீதிபதி சந்த்ரசௌத் சமீபத்தில் அம்பேத்கார் நினைவு நாளையொட்டி ” மாணவர்கள் மெரிட்டில் தேர்ச்சி பெற்று வருவது மேல் சாதி மனோபாவம்” என்ற அரும்பெரும் கருத்தை கூறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

```
```

இதுகுறித்து பிஜேபி எம்பி தேஜஸ்வி சூர்யா கூறுகையில் “ஹிந்து அல்லாதோர் ஹிந்துக்களின் கோவில்களில் வியாபாரம் செய்து பணம் சம்பாதிக்கலாம். ஆனால் மாற்று மத வழிபாட்டுத்தலங்களின் இடத்தில் இந்துக்கள் கடை வைக்க அனுமதி இல்லை. உச்சநீதிமன்றம் இதில் தலையிடவே செய்யாது.” என தெரிவித்துள்ளார். ஆந்திர அரசு மதமாற்றத்தை ஊக்குவிக்கிறது என்கிற குற்றசாட்டு எழுந்துவரும் நிலையில் இந்த உச்சநீதிமன்ற அறிவிப்பு மேலும் ஜெகன்மோகன் ரெட்டியை குஷிப்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சியினர் விமர்சித்துவருகின்றனர்.

……உங்கள் பீமா