Thursday, May 21, 2026
Home > செய்திகள் > அவனை விட்ருங்க..! பாகிஸ்தானை அலறவிட்ட NIA..!

அவனை விட்ருங்க..! பாகிஸ்தானை அலறவிட்ட NIA..!

புதுதில்லி : உலகநாடுகளில் எங்கும் இல்லாத விந்தையான மனிதர்களை தாராளவாதிகள் என்ற போர்வையில் இந்தியாவில் மட்டுமே காணலாம். பல உயிர்களை குடித்த அஜ்மல் கசாப்பை சுதந்திரபோராட்ட தியாகியை போல கொண்டாடித்தீர்த்த விசித்திர மனிதர்கள் கொண்ட தேசம் நமது இந்தியா என்றால் அது மிகையாகாது. ஐம்பது ரூபாய் திருடியவரை ஆயுளுக்கும் அலைய விடும் சம்பவமும் வயதான பெற்றோர்கள் இந்தியாவில் இருப்பதாலும் இரண்டரை கோடி ரூபாய் பெரிய விஷயம் இல்லை எனவும் வெளிநாடு செல்ல அனுமதி கொடுத்த சம்பவமும் நடந்த தேசம் இது.

 



இந்நிலையில் காஷ்மீர் பிரிவினைவாத பயங்கரவாதியான யாசின் மாலிக்கிற்கு நேற்று டெல்லி நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்தது. இதைக்கண்டித்து பாகிஸ்தானி அடிப்படைவாதிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் தங்கள் கண்டனங்களை பதிவுசெய்தனர். மேலும் பாகிஸ்தான் அரசு இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய அதிகாரிகளை நேரில் அழைத்தும் தனது கண்டங்களை பதிவுசெய்துள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில் “யாசின் மாலிக்கின் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் அனைத்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கவும் அவரை சிறையில் இருந்து உடனடியாக விடுவிக்கக்கோரியும் இந்திய தூதர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.

இந்த யாசின் மாலிக் வெளிநாடுகளில் இருந்து நிதியை பெற்று பயங்கரவாதிகளுக்கு உதவிபுரிந்துள்ளார். மேலும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடைபெற்ற வன்முறைகளுக்கெல்லாம் மூளையாக இருந்து செயல்பட்டதுடன் பணிமுடிந்து திரும்பிய ராணுவ வீரர்களை துப்பாக்கியால் சுட்டுகொன்றுள்ளான். இதை அவனே தனியார் ஆங்கில சேனலில் நடந்த நேரலையில் கூறியுள்ளான். இவனால் பல இந்திய தாய்மார்கள் தங்களது தாலியை இழந்திருக்கிறார்கள்.

ஆனால் அவன் மனைவி முஷால் ஹுசைன் முல்லிக் இந்திய நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டவிரோதமானது என்றும் இது ஒரு கறுப்புநாள் என்றும் கூறியுள்ளார். இதைவிட காமெடி ரகம் யாசின் சொன்னது. அவனுக்கு தண்டனை விதிக்கப்பட்டு சிறைக்கு கொண்டு செல்லப்படும்போது ” மஹாத்மா காந்தியின் அகிம்சை கருத்துக்களை பின்பற்றுபவன் நான்” என செய்தியாளர்களிடம் கூறியுள்ளான்.



காஷ்மீர் பகுதிகளை பலவருடங்களாக பதட்டத்திலேயே வைத்திருந்த யாசின் மாலிக்கிற்கு தூக்குத்தண்டனை விதிக்கவேண்டும் என NIA தனது வாதங்களை முன்வைத்தது. ஆனாலும் அவனுக்கு ஆயுள் தண்டனையே வழங்கப்பட்டிருப்பது அனைவரையும் திகைப்பிற்குள்ளாகியிருக்கிறது. மேலும் பிரிவினைவாதிகள் வேர் அடியோடு வெட்டப்பட்டு வருவதால் திகைத்துள்ள பாகிஸ்தான் தற்போது விழிபிதுங்கி நிற்கிறது.