பழநி : பிரதிஷ்டை செய்யப்பட்ட வேல் சமூக விரோதிகளால் நேற்று தகர்க்கப்பட்டது.
திமுக ஆட்சிக்கு வந்த ஆறுமாதங்களில் இதுவரை 163 இந்து கோவில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. மேலும் பல கோவில்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை கோவில்களை சேதப்படுத்திய மர்மநபர்கள் மர்மநபர்களாகவே இருக்கிறார்கள். யாரும் கைதுசெய்யப்பட்டதாய் தெரியவில்லை என இந்து அமைப்பினர் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.

திமுக ஆட்சியில் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமே சேதப்படுத்தப்படுவதும் ஆக்கிரமிப்பு நிலம் என கூறி தகர்க்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. இது குறித்து பேசிய இந்து அமைப்பினர் ” முதல்வரின் மதச்சார்பின்மை பாராட்டுக்குரியது. ஆனால் இந்து மதத்திற்கு மட்டுமே தொடர்ந்து தீங்கிழைத்துக் கொண்டிருக்கிறார்.

தமிழகத்தில் பல சர்ச்சுகள் பல மசூதிகள் ஏன் அரசு அலுவலகங்கள் கூட நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கிறது. முக ஸ்டாலின் தனது கடவுள் மறுப்பு கொள்கையை நிரூபிக்க இந்துக்களின் கோவில்களை மட்டுமே இடித்து வருகிறார்” என கூறுகின்றனர்.

இந்நிலையில் பழநி அடிவாரத்தில் பிரதிஷ்டை செய்து நிர்மாணிக்கப்பட்ட வேல் ஒன்றை சமூக விரோதிகள் இடித்து தள்ளியுள்ளனர். இது அந்த பகுதியில் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது.
……உங்கள் பீமா