Friday, March 29, 2024
Home > செய்திகள் > மஹாகவி பாரதியின் நினைவஞ்சலியை தமிழில் நினைவு கூறிய பிரதமர் மோடி..!

மஹாகவி பாரதியின் நினைவஞ்சலியை தமிழில் நினைவு கூறிய பிரதமர் மோடி..!

மஹாகவி சுப்ரமணிய பாரதியின் 100 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு பாரத பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் தங்களின் அஞ்சலியை செலுத்திவருகின்றனர். பாரத பிரதமர் மோடி தமிழில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் “சிறப்புவாய்ந்த சுப்ரமணிய பாரதியாரின் 100வது நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது பெரும் புலமை, நாட்டுக்கு அவர் ஆற்றிய பன்முகப் பங்கு, சமூக நீதி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மீதான நன்னெறிகளை நாம் நினைவு கூறுகிறோம்.” என தெரிவித்துள்ளார்.

`

மேலும் 2020 டிசம்பரில் மஹாகவி சுப்ரமணிய பாரதி குறித்து தான் பேசிய வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

```
```

தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை.கே தனது ட்விட்டர் பக்கத்தில் “பாட்டுத்திறத்தாலே, விடுதலை வேட்கையை தூண்டியவர். சாதிகள் இல்லையடி எனப் பாடியவர். பெண்கள் முன்னேற்றத்தை பேசியவர். சொல் சித்தர் சுப்பிரமணிய பாரதியின் நூறாவது நினைவுநாளில் அவரை போற்றுகிறோம்.தமிழில் பாரதியை நினைத்து வாழ்த்திய நம் பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி.Folded hands”
என பதிவிட்டுள்ளார்.