தலைநகர் டெல்லியில் ஒவ்வொரு துறைக்கும் தனியான மாளிகை ஒதுக்கப்பட்டிருக்கிறது. அரசு சார்ந்த விருந்தினர் மாளிகை அலுவலக கட்டிடங்கள் ஆகியவற்றிர்கு அரசே வாடகை செலுத்துகிறது. சில தனியார் அமைப்புகள் மற்றும் பொது துறை நிறுவனங்களிடம் வாடகை என்ற பெயரில் மிகமிக குறைவான அளவில் அரசு பணத்தை வசூலிக்கிறது.
அதனால் பல தனியார் அமைப்புகள் தலைநகரில் மிக குறைந்த வாடகையில் அரசிடம் கட்டிடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு வாடகை தொகையை சரிவர திரும்ப செலுத்துவதில்லை. இதில் இந்திய மகளிர் பிரஸ் கிளப்பும் ஒன்று. இதன் ப்ரெசிடெண்டாக தி ஏசியன் ஏஜ் எனும் பத்திரிக்கையை சேர்ந்த வினிதா பாண்டே இருக்கிறார்.
இந்த பிரெஸ் க்ளப் டில்லியில் அரசுக்கு சொந்தமான விண்ட்ஸர் பிளேஸ் எனும் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இங்கு இந்தியாவின் அனைத்து புகழ்பெற்ற பத்திரிக்கைகளின் பெண் நிருபர்கள் சந்திப்பது வழக்கம். சமீபத்தில் பாகிஸ்தான் உயர் அதிகாரி ஒருவருக்கு இங்கு விருந்து வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அரசு தரப்பில் இது பற்றி எந்த தகவலும் வந்ததாக குறிப்பிடவில்லை.
ஆனால் கடந்த 5ம் தேதி இந்தியன் வுமன் பிரஸ் கிளப் ஆப் கார்ப்ஸ்சுக்கு அரசு ஒரு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. அதில் கட்டிடத்தை உடனே காலி செய்யுமாறும் பாக்கி தொகையை நிலுவையின்றி செலுத்துமாறும் டைரக்டரேட் ஆப் எஸ்டேட்ஸ் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
யூனியன் ஹவுசிங் அண்ட் அர்பன் அபயர்ஸ் இது குறித்து ராஜ்யசபாவில் விளக்கம் அளித்தது. அதில் “ஜனவரி 2018ல் இந்தியன் வுமன் பிரஸ் கிளப் உடனான ஒப்பந்தம் 2021 ஜனவரி வரை நீட்டிக்கப்பட்டது. வாடகை நிலுவைத்தொகை 30.3 லட்சம் பாக்கியிருக்கிறது.” என தெரிவித்தது. ஆனால் பாகிஸ்தான் அதிகாரிக்கு கொடுக்கப்பட்டதாக சொல்லப்படும் விருந்து நிகழ்ச்சியை பற்றி எந்த குறிப்பும் வெளியிடப்படவில்லை.
…உங்கள் பீமா