3-11-21/ 6.27am
தௌஹித் ஜமாஅத் அமைப்பு கடந்த சில வருடங்களாக இந்துக்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருவதாக இந்து அமைப்பினர் தொடர் குற்றசாட்டை முன் வைக்கின்றனர். இந்நிலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் பிஜேபி தலைவருமான ஹெச். ராஜா தௌஹித் ஜமாஅத் அமைப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய இந்து அமைப்பினர்கள் ” விநாயக சதுர்த்திக்கு இந்துக்களின் மத நம்பிக்கையை கொச்சைப்படுத்து விதத்தில் செயல்படுவது மேலும் கல்லெறிவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். கோவில் தேருக்கு தீவைக்கின்றனர். திருவிழா நடத்த தடை செய்கின்றனர்.
தங்களது பகுதிக்குள் இந்து தெய்வங்கள் ஊர்வலம் கொண்டு செல்வதை கடுமையாக எதிர்த்து வன்முறையில் ஈடுபடுகின்றனர். பங்களாதேஷில் மேற்கு வங்கத்திலும் காஷ்மீரிலும் தொடர்ந்து தாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
இங்கே தமிழகத்தில் ஆளும் அரசு எண்கள் கோவில்களை தரைமட்டமாக்கி எங்களை மேலும் வேதனைக்குள்ளாக்குகிறது. தடை செய்யப்பட வேண்டிய தௌஹித் ஜமாஅத் அமைப்பு நேரடியாக இப்போது இந்துக்களை குறிவைத்து செயல்பட ஆரம்பித்துவிட்டது. இதை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். இல்லையெனில் சமூக நல்லிணக்கம் கேள்விக்குறியாகிவிடும்” என தெரிவித்தனர்.
இந்நிலையில் ஹெச்.ராஜா அவர்கள் தௌஹித் ஜமாஅத் அமைப்புக்கு தனது கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். அதில் “முஸ்லிம் மதவெறி அமைப்பு இந்துக்களின் பண்டிகை,பழக்க வழக்கங்களில் தலையிட்டால் அதேபோல் இவர்கள் பண்டிகைகள் குறித்தும் இந்துக்கள் கருத்துக்கூற வேண்டிவரும். இஸ்லாமிய மதவெறியர்கள் கட்டுப்பாட்டுடன் இருப்பது அவர்களுக்கு நல்லது.” என கூறியுள்ளார்.
…….உங்கள் பீமா
#hraja #thowhithjamaath #crackersban #diwali