Thursday, March 28, 2024
Home > செய்திகள் > கல்லூரி பேராசிரியரை கொன்று உடலை பல கூறாக்கி அதே கல்லூரியில் புதைத்த அவலம்..!! கல்லூரி தாளாளர் ரபியுல் கைது..!!

கல்லூரி பேராசிரியரை கொன்று உடலை பல கூறாக்கி அதே கல்லூரியில் புதைத்த அவலம்..!! கல்லூரி தாளாளர் ரபியுல் கைது..!!

பங்களாதேஷ் அசூலியா பகுதியை சேர்ந்த ரிபான் சந்திர பர்மன் கடந்த ஜூலை 22 அன்று அஷூலியா காவல் நிலையத்தில் ஒரு புகார் தாக்கல் அளித்திருந்தார். அதில் ” எனது சகோதரர் மிண்டு சந்திர பர்மன் சவர் குடியிருப்பு பள்ளி மற்றும் கல்லூரியின் முதல்வராக பணிபுரிகிறார். கடந்த ஜூலை 13 அன்று பணிக்கு சென்றவர் திரும்பவில்லை. அவர்குறித்த தகவலும் இல்லை. ஆகவே அவரை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.

27 நாட்களுக்கு மேலாக போலிஸார் இந்த வழக்கில் துப்புகிடைக்காமல் அலைந்தனர். அந்த வழக்கு விரைவு நடவடிக்கை பட்டாலியன் (ரப்) உறுப்பினர்களிடம் வழங்கப்பட்டது. அதையடுத்து தீவிர விசாரணையில் இறங்கிய அவர்கள் சவாரில் உள்ள ஒரு பள்ளி மற்றும் கல்லூரியில் முதல்வரின் சிதைந்த உடல் பாகங்களை மீட்டனர். அவர் பணிபுரிந்த கல்லூரி வளாகத்திலேயே உடல் பலபாகங்களாக வெட்டி புதைக்கப்பட்டது கண்டறியபட்டது.

இது தொடர்பாக அந்த பள்ளி மற்றும் கல்லூரியின் நிறுவனர் ரபியுல், மொதலேப் மற்றும் ரபியுலின் மருமகன் பாட்ஷா ஆகியோரை ராபிட் அதிரடி பட்டாலியன் கைது செய்தது. இந்த சம்பவத்தை செய்தியாளர்களிடம் விவரித்த ராபிட் அதிரடி பட்டாலியனின் சட்ட மற்றும் ஊடகப் பிரிவின் இயக்குனர் கமாண்டர் கந்தகர் அல் மொயின் கூறுகையில்,

`

“கொல்லப்பட்ட மிண்டு சந்திர பர்மன் மற்றும் ரபியுல், மொதலேப் ஆகியோர் தொழில் முறை பார்ட்னர்கள். ரபியுல், மொதலேப் மற்றும் ரபியுல் மருமகன் மொதலேப் ஆகியோர் ஜூலை 7 அன்று கொலைக்கான திட்டத்தை வகுத்தனர். பின்னர் திட்டத்தின் படி மிண்டு சந்திர பர்மனை ஜூலை 13 அன்று இரவு பயிற்சி வகுப்புகள் எடுத்து முடித்த பிறகு பள்ளியிலிருந்த உபயோகப்படுத்தாத ஒரு அறைக்கு அழைத்தனர்.

```
```

பின்னர் மூவரும் மிண்டுவை கொன்று உடலை ஆறு துண்டுகளாக வெட்டி. உடலின் ஐந்து துண்டுகளை பள்ளி வளாகத்தில் புதைத்து தலையை மட்டும் அஷ்கோனா பகுதியில் உள்ள குளத்தில் வீசியுள்ளனர். ராப் பட்டாலியன் அஷூலியாவில் உள்ள பள்ளியில் இருந்து ஐந்து உடல் பாகங்களை தோண்டி எடுத்துவிட்டது. எங்கள் குழு தலையையும் குளத்திலிருந்து மீட்டது” என குறிப்பிட்டார்.

…உங்கள் பீமா