Saturday, October 5, 2024
Home > செய்திகள் > கோவிலுக்கு போன இஸ்லாமிய நடிகைக்கு நேர்ந்த கதி…! இந்திய இஸ்லாமியர்களின் மதசார்பின்மை இவ்வளவு தானா..!

கோவிலுக்கு போன இஸ்லாமிய நடிகைக்கு நேர்ந்த கதி…! இந்திய இஸ்லாமியர்களின் மதசார்பின்மை இவ்வளவு தானா..!

3-11-21 / 5.35am

கோவிலுக்கு சென்று இங்குதான் எனது வாழ்வு ஆரம்பமானது என சொன்ன இஸ்லாமிய நடிகையை இஸ்லாமியர்கள் விமர்சித்து வருகின்றனர். மதசார்பின்மை என்பது பெரும்பான்மை மக்களிடம் மட்டுமே எதிர்பார்க்கப்படுவது சமூகத்தில் பிளவையே உண்டு பண்ணும்.

ஜனநாயகம் மதசார்பின்மை பேசும் தாராளவாதிகளின் உள்நோக்கம் ஒருதலைப்பட்சமாகவே தலைப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட மத பண்டிகையில் மட்டுமே அது விழித்துக் கொள்ளும் அல்லது பெரும்பான்மை மக்களிடம் மட்டுமே மதசார்பின்மை எதிர்பார்க்கப்படும்.

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் நடித்த கேதார்நாத் எனும் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சாரா அலிகான். இவர் நேற்று மறைந்த ஸ்ரீதேவி அவர்களின் மகளான ஜான்வி கபூருடன் கேதார் நாத் சென்றார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்ற வலைத்தளங்களில் பதிவிட்டு,

`

“ஜெய் போல்நாத் . நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். எனது வாழ்வு இங்கிருந்தே ஆரம்பமானது.” என குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவில் இஸ்லாமியர்கள் பலர் சாரா அலிகானை ஆபாசமாக பேசி “நீயெல்லாம் ஒரு உண்மையான இஸ்லாமியர் இல்லை.” என தகாத வெளியில் சொல்ல முடியாத வார்த்தைகளில் விமர்சித்துவருகின்றனர்.

அதே போல நிருபரான ரூபிகா லியாக்குவாத் இந்துக்களின் கலாச்சாரத்தை பின்தொடர்வதாக பதிவிட்டதற்கு அவரையும் ஆபாச வார்த்தைகளில் திட்டி தீர்த்து வருகின்றனர். இங்கே தமிழகத்தை சேர்ந்த தவ்ஹித் அமைப்பு பட்டாசு வெடிக்காதீர்கள் என ஊரெங்கும் விளம்பர பதாகைகள் வைத்து இந்து இஸ்லாமியர்களின் சகோதரத்துவத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

```
```

ஜனநாயக நாடான இந்தியாவில் பெரும்பான்மை மக்களுக்கு ஒரு சட்டம் மாற்று மதத்தவருக்கு ஒரு நியாயம் என சமநிலை இல்லாத போக்கு சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் என நடுநிலையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

……உங்கள் பீமா

#இஸ்லாமியர்கள் #சாராஅலிகான் #கேதார்நாத் #நடிகை #kedarnath #saraalikhan #jhanvikapoor