உலகின் இ காமர்ஸ் நிறுவனங்களில் மிக முக்கியமான நிறுவனங்களில் அலிபாபாவும் ஒன்று. இது சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல் படுகிறது. இதில் சீன கிளையில் பணிபுரியும் கிளை மேலாளர் ஒருவர் உடன் பணிபுரிந்த பெண்ணை கற்பழித்து விட்டதாக சொல்லப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில் ” கடந்த மாதம் அலுவலக பணி நிமித்தமாக எனது கிளை மேலாளருடன் வெளியூர் சென்றேன். அங்கு அவர் என்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி கற்பழித்துவிட்டார். மேலிடத்தில் புகார் அளித்தும் பயனில்லை அதனால் காவல்துறையை நாடினேன்.” என குறிப்பிட்டார்.
காவல்துறை இந்த வழக்கை நீதிமன்றம் எடுத்துச்சென்றது. அதற்குள் உஷாரான அலிபாபா நிறுவனம் மேலாளரையும் உடன் இருந்த பணியாளர்களையும் அந்த பெண் உட்பட அனைவரையும் பணியிலிருந்து இடைநீக்கம் செய்தது.
இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று மாலை ஹுவாயின் மாவட்டம் ஜினான் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அந்த நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சீன மக்களை தவிர அனைவரயும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் என தீர்ப்பளித்தது. மேலும் வலுக்கட்டாயமாக அநாகரிக முறையில் பாலியல் மீறல்களில் ஈடுபடுவது குற்றம் அல்ல என தீர்ப்பளித்தது.