29-11-21/7.07am
சென்னை : இந்திய இறையாண்மைக்கு எதிராக அடிக்கடி பேசி வரும் அரசியல் தலைவர்களில் எப்போதுமே முன்னணியில் வரிசை கட்டி நிற்பவர் மதிமுக தலைவர் வை.கோபால்சாமி.
திமுகவின் ஈழத்தமிழர்களின் நிலைப்பாட்டை எதிர்த்து பல உயிர்களை பலிகொடுத்து தனி கட்சி அமைத்தவர் வை.கோபால்சாமி. அதன்பின்னர் கள்ளத்தோணியிலேறி விடுதலைப்புலிகளை சந்தித்து இந்திய தேசத்துக்கு எதிரான செயலில் ஈடுபட்டார்.இதனால் இவற்றின் பேச்சுக்களால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இவரை ஒரு வருடம் பொடா சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தார்.
சிறையிலிருந்து வெளிவந்த வைகோ மீண்டும் அதிமுகவுடனேயே கூட்டணி அமைத்தார் என்பது வரலாறு. இந்நிலையில் இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது. இது குறித்து பேசிய வை. கோபாலசாமி “வேளாண் சட்டங்களை திரும்ப பெறுகிறேன் என மோடி அறிவித்திருக்கிறார். ஆனால் குளிர்கால கூட்டத்தொடரில் முதல் மசோதாவாக தாக்கல் செய்யப்படாமல் பத்தாவதாக தாக்கல் செய்யப்படுவது சந்தேகத்தை கிளப்புகிறது.
மத்திய அரசின் ஒரே மொழி ஒரே நாடு கொள்கையை ஏற்க முடியாது. தமிழகத்தில் இந்தியை திணிக்க நினைத்தால் இந்தியா பல துண்டுகளாக உடையும்” என இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசியுள்ளார். இது மத்திய புலனாய்வுத்துறை கவனத்திற்கு கொண்டு செல்லப்படுமா என நடுநிலையாளர்கள் கேள்வியெழுப்பிவருகின்றனர்.
…..உங்கள் பீமா