Tuesday, June 17, 2025
Home > செய்திகள் > அசத்திய தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை..! நன்றி சொன்ன நெட்டிசன்..!

அசத்திய தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை..! நன்றி சொன்ன நெட்டிசன்..!

4-3-22/13.33pm

சென்னை : உக்ரைன் ரஷ்யா போரை உலக மக்கள் பயத்துடன் பார்க்க திமுக அதை அரசியலாக பார்க்கிறது என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. நேற்று பிரபல ஆங்கில தொலைக்காட்சியில் திமுகவின் உக்ரைன் அரசியல் லாபி பற்றி கடுமையாக விமர்சித்திருந்தது.

உக்ரைனில் சிக்கித்தவிக்கும் மக்களை அந்தந்த நாடுகள் காப்பாற்ற முடியாது என கைவிரிக்க இந்தியா தனது குடிமகன்களை பத்திரமாக மீட்டுவருகிறது. அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி ஜோத்ராதித்ய சிந்தியா வி.கே.சிங் உட்பட நான்கு அமைச்சர்கள் நேரடியாக மாணவர்களை வரவேற்கின்றனர். ஆபரேஷன் கங்கா எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த மிஷன் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

ரஷ்யா இந்தியர்களை காப்பாற்ற வேண்டி ஆறுமணிநேர கால அவகாசத்தை இந்தியாவிற்கு வழங்கி போரை நிறுத்தியிருந்தது. அங்கே பதட்டமான சூழல் நிலவி வரும் வேளையில் திடீரென மத்திய அரசு அனைவரையும் மீட்டுவரும் வேளையில் ஐந்து பேர் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது. இந்த ஐவர் குழு நேரடியாக உக்ரைனில் இறங்கி தமிழர்களை மீட்டுக்கொண்டு வருமா அல்லது எல்லையோரப்பகுதிகளில் சகஜநிலையில் வாழும் மாணவர்களை பிடித்துக் கொண்டு வருமா அல்லது உக்ரைன் மற்றும் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துமா என்பதை வரும் காலங்களில் இந்த பிரச்சினை தீர்ந்த பின்னர் திமுக அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

`

மேலும் உக்ரைன் மாணவர்கள் மீட்பு வண்டி அவசரம் என நோட்டிஸ் ஒட்டப்பட்ட வாகனம் ஒன்று மீனம்பாக்கம் தாம்பரம் பகுதியில் சுற்றித்திரிவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தமிழினியன் என்பவர் முகநூல் மூலம் பிஜேபி நிர்வாகிகளை தொடர்புகொண்டு தன்னை காப்பற்றுமாறு கூறியுள்ளார். அதையடுத்து களமிறங்கிய பிஜேபி தலைவர் அண்ணாமலை துரிதமாக இயங்கி அந்த மாணவரை மீட்டுள்ளார். அந்த மாணவர் அண்ணாமலைக்கு நன்றி சொல்லி ஒரு பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகிவருகிறது.

```
```

தனக்கு அழைப்பு வந்துவிட்டதாக பதிவிட்டவர் தற்போது தன்னை அழைக்கயாரும்வரவில்லை என்றும் பிஜேபியினர் பொய்சொல்கிறார்கள் என்றும் மாற்றிபதிவிட்டு வருகிறார். இவரது பின்புலத்தில் திமுக ஐடி விங் செயல்படுவதாக கூறப்படுகிறது.

…..உங்கள் பீமா