Friday, March 29, 2024
Home > செய்திகள் > ஜெய்ஸ்ரீராம் என் கூறிய மாணவர்கள் இடைநீக்கம்..! முதல்வர் நடவடிக்கை

ஜெய்ஸ்ரீராம் என் கூறிய மாணவர்கள் இடைநீக்கம்..! முதல்வர் நடவடிக்கை

4-4-22/15.34PM

ஜார்கண்ட் : ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியான ஜார்கன்ட் முக்தி மோர்ச்சா ஆட்சி நடைபெற்றுவருகிறது. முதல்வராக ஹேமந்த் சோரன் உள்ளார். இவர் முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜார்கண்ட் மாநிலம் ஜெகந்நாத்பூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த சனிக்கிழமை ஹிந்துக்களின் புத்தாண்டின் முதல்நாளான நவ் ஸம்வத்சர் கொண்டாட கல்லூரியில் மாணவர்கள் ஒன்றுகூடினர். அப்போது மாணவர்கள் சிலர் ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிட்டனர். இதைக்கண்ட மாற்று சமூக மாணவர்கள் முதல்வரிடம் புகாரளித்ததாக தெரிகிறது.

அதையடுத்து ஹிந்து மாணவர்கள் 500 பேருக்கு மதிய உணவு வழங்க முதல்வர் மறுத்துவிட்டார். மேலும் முழக்கமிட்ட அம்ரித் மற்றும் கன்ஷ்யாம் ஆகிய இருவரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இதுகுறித்து நெட்டிசன் ஒருவர் தனது பதவியில் “ஜெகன்நாத் பூர் பாலிடெக்னிக் கல்லூரியின் குடியிருப்பு பகுதியில் மொட்டைமாடியில் மாணவர்கள் ஒன்றுகூடியுள்ளனர். இதில் என்ன தவறு இருக்கிறது.

`

அவர்கள் மது அருந்தவோ அல்லது புகை பிடிக்கவோ வேறு எந்த காரணத்திற்கும் செல்லவில்லை. புத்தாண்டை கொண்டாட ஹிந்து மாணவர்கள் நினைப்பது தவறா. அல்லது அவர்கள் ஜெய் ஸ்ரீராம் என்றும் பாரத் மாதா கி ஜே என முழக்கமிட்டது தவறா ” என மாநில முதல்வர் ஹேமந்த்சோரனிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

```
```

இதுகுறித்து கல்லூரி முதல்வர் சஞ்சீவ்குமார் கூறுகையில், “ஒரு குழு எதிர்பாராவிதமாக கூடி ஜெயஸ்ரீராம் என கோஷங்களை எழுப்பினர். பல்வேறு சமூகங்களை சேர்ந்த மாணவர்கள் இங்கு பயில்வதால் இதுபோன்ற நடத்தைகள் கல்லூரி சூழலுக்கு தீங்கு விளைவிக்கும். ஒழுங்கு நடவடிக்கையின் பேரிலேயே இருமாணவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.

…..உங்கள் பீமா