Saturday, July 27, 2024
Home > செய்திகள் > கர்நாடகா: ஹிஜாப் அணிய தடையா..? பொங்கி எழுந்த GIO..!

கர்நாடகா: ஹிஜாப் அணிய தடையா..? பொங்கி எழுந்த GIO..!

20-1-22/14.35PM

கர்நாடகா : கல்லூரியில் ஹிஜாப் அணிவதற்கு தடை கூறிய கல்லூரி முதல்வருக்கு எதிரான போராட்டங்கள் மூன்று வாரங்களாக தொடர்ந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வரை பணிநீக்கம் செய்யக்கோரி இணையத்தில் ஹேஷ்டேக் பரவி வருகிறது.

கர்நாடக மாநிலம் உடுப்பியில் அரசுக்கு சொந்தமான கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பயின்று வந்த ஏழு மாணவிகளை நிர்வாகம் கல்லூரிக்கு சரியாக வராத காரணத்தால் கடந்த டிசம்பர் 30 லிருந்து இடைநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் தாங்கள் ஹிஜாப் அணிந்து வந்ததால்தான் இடைநீக்கம் செய்யப்பட்டதாக கூறி மாணவிகள் இஸ்லாமிய சங்கங்களிடம் முறையிட்டதாக தெரிகிறது.

அதையடுத்து CFI (CAMPUS FRONT INDIA) மற்றும் GIO (GIRLS ISLAAMIC ORGANISATION) அமைப்பு போராட்டத்தில் குதித்துள்ளது. மேலும் இது குறித்த புகார் மனுவோடு கல்லூரி நிர்வாகம் மற்றும் மாவட்ட ஆட்சியரை சந்தித்துள்ளனர். அதில் கல்லூரியில் 150 இஸ்லாமிய மாணவிகள் பயிலுவதாகவும் அவர்கள் மத உரிமையை பின்பற்ற அவர்களுக்கு உரிமை இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

`

இதுகுறித்து பேசிய CFI மாநில உறுப்பினர் மஸூத் ” முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் மாணவிகளை மிரட்டி 15 நாள் வகுப்புக்கு வராததால்தான் இடைநீக்கம் செய்கிறோம் என எழுதிக்கொடுங்கள் என மிரட்டியிருக்கின்றனர். மேலும் எழுதி தரவில்லை என்றால் எப்படி வாங்க வேண்டும் என எங்களுக்கு தெரியும் எனவும் கூறியிருக்கின்றனர்” என தெரிவித்தார்.

உடுப்பி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் காலேஜ் டெவெலப்மென்ட் கமிட்டி சேர்மனான ரகுபதி கூறுகையில் ” ஜனவரி 1 நடந்த கூட்டத்தில் மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் டெபுடி டைரக்டர் மாருதி உட்பட பலர் கலந்து கொண்டோம். அப்போது அனைத்து மாணவிகளும் ஒரே சீருடையில் வரவேண்டும் என தீர்மானிக்கப்பட்டு முடிவு பெற்றோர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது” என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

```
```

கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு கூறுகையில் “இந்துக்கள் பொட்டு வைத்துக்கொள்கிறார்கள். கிறித்தவர்கள் சிலுவை அணிந்து கொள்கிறார்கள். இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய கூடாதா” என கேள்வியெழுப்புகின்றனர். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த கர்நாடக கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் ” மத அடையாளங்களை கல்வி நிறுவனத்திற்குள் அனுமதிக்க முடியாது” என கூறியுள்ளார்.

இஸ்லாமிய அமைப்புக்கள் கல்லூரி முதல்வருக்கு எதிராக தொடர்ந்து போர்க்கொடி தூக்கிவரும் நிலையில் அரசு இந்த பிரச்சினையை எப்படி கையாளப்போகிறது என பொதுமக்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

….உங்கள் பீமா