20-1-22/17.00pm
மணிப்பூர் : மணிப்பூரில் பிரென்சிங் தலைமையிலான பிஜேபி ஆளும்கட்சியாக இருக்கிறது. காங்கிரஸ் மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பிஜேபிக்கு பெரும் சவாலாக இருக்கும் என கருதப்பட்ட நிலையில் இன்று பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

மணிப்பூர் மாநிலம் தங்கா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்து எம்.எல்.ஏவானவர் டோங்ப்ராம் ரபின்ரோ. 2018ல் பிஜேபி எம்.எல்.ஏ வான சத்தியப்ரதா இவர் மீது கட்சித்தாவல் தடை வழக்கைதொடுத்திருந்தார். 2020ல் மணிப்பூர் சபாநாயகர் டோங்ப்ராம் ரபின்ரோவை தகுதிநீக்கம் செய்தார். இவர் மமதாவின் திரிணாமூல் காங்கிரசை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதையடுத்து அரசியல் வாழ்வில் ஒதுங்கியிருந்த அவர் மீண்டும் பிஜேபியில் இணைந்தார். நேற்று முன்தினம் வேட்பாளர் அறிவிப்பு வந்த நிலையில் பிஜேபியிலிருந்து விலகி திரிணாமூல் கட்சிக்கு ஆதரவளிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்த நிலையில் காங்கிரசுக்கு ஆதரவளிப்பதாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேட்டியளித்து பரபரப்பை உண்டாக்கினார்.

இதனிடையே திடீரென இன்று பிஜேபியில் மீண்டும் தன்னை இணைத்துக்கொண்ட டோங்ப்ராம் ரபின்ரோபிஜேபியின் வளர்ச்சிக்கு பாடுபடப்போவதாக அறிவித்துள்ளார். மேலும் ஒரு திருப்பமாக மணிப்பூர் மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் சால்டோனிலேன் ஆமோ பிஜேபியில் இணைந்துள்ளது பெரும் திருப்பமாக அமைந்துள்ளது.


காங்கிரஸ் மற்றும் திரிணாமூல் கூட்டணி வைக்கலாம் என கூறப்பட்டு வந்த நிலையில் இரண்டு கட்சி எம்.எல்.ஏக்களும் பிஜேபியில் இணைந்திருப்பது இருக்கட்சி தலைவர்களுக்கும் அதிர்ச்சியளித்துள்ளது. மேலும் மணிப்பூரில் பிஜேபி மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்புக்கள் அதிகரித்து வருவதாக இன்று வெளியான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
…..உங்கள் பீமா